வாட் வரியை குறைக்க வலியுறுத்தி பாஜக சார்பில் ஆர்ப்பாட்டம்

மாநில அரசு, பெட்ரோல், டீசல் மீதான வாட் வரியை குறைக்க வேண்டும் என, பா.ஜ., கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.;

Update: 2021-11-29 05:45 GMT

தமிழக அரசு, பெட்ரோல் , டீசல் மீதான வாட் வரியை குறைக்க வலியுறுத்தி பாஜகவினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

திருப்பூர் தெற்கு மாவட்ட பாஜ., கட்சியின் விவசாய அணி சார்பில், தமிழக அரசு, பெட்ரோல், டீசல் மீதான வாட் வரியை குறைக்க வேணடும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி, மாட்டு வண்டியில் வந்து போராட்டம் நடத்தினர்.

நாட்டில் உள்ள அனைத்து மாநிலங்களும், பெட்ரோல், டீசல் மீதான வாட் வரியை குறைத்துள்ள நிலையில், தமிழக அரசு மட்டும் வாட் வரியை குறைக்காமல் இருப்பது, கண்டனத்துக்குரியது என ஆர்ப்பாட்டத்தில் தெரிவிக்கப்பட்டது. இந்த போராட்டத்துக்கு, விவசாய அணி மாநில தலைவர் ஜி.கே.நாகராஜ், தலைமை வகித்தார். விவசாய பிரிவு நிர்வாகிகள், கட்சியினர் பலரும் பங்கேற்றனர்.

Tags:    

Similar News