உயிரிழந்த மாணவன்: நஷ்ட ஈடு கேட்டு கோட்டாட்சியரிடம் மனு
ஆற்றில் குளிக்க சென்று இறந்த மாணவனுக்கு, 5 லட்சம் ரூபாய் நஷ்ட ஈடு கேட்டு மாணவனின் பெற்றோர் கோட்டாட்சியரிடம் மனு வழங்கினர்.;
சேலம் மாவட்டம், ஆத்துாரை வன்னயம்மாதேவி பகுதியை சேர்ந்த முருகேசன் மகன் மகேந்திரன் (வயது19). தாராபுரத்தில் உள்ள தனியார் கல்லுாரியில், முதலாம் ஆண்டு, பி.எஸ்.சி., நர்சிங் படிப்பில் சேர்ந்து, கல்லூரி விடுதியில் தங்கி படித்து வந்தார். சக நண்பர்களுடன் வெளியே செல்வதாக கூறி, தாராபுரத்துக்கு மகேந்திரன் வந்தார்.
கடந்த ஆக.20ம் தேதி, நண்பர்களுடன் குளித்து கொண்டிருந்தவர் திடீரென நீரில் மூழ்கினார். நண்பர்கள், அவரை தேடி கண்டுபிடித்து தனியார் ஆம்லென்ஸ் மூலம் தாராபுரம் அரசு ஆஸ்பத்திக்கு சிகிச்சைக்கு கொண்டு செல்லும் வழியிலேயே பரிதாபமாக இறந்தார்.
கல்லுாரி நிர்வாகம் சார்பில், நஷ்ட ஈடாக, 5 லட்சம் ரூபாய் தருவதாக கூறியதால், உடலை பெற்று சென்று மாணவனின் சொந்த ஊரில் அடக்கம் செய்தனர். இதற்கிடையில் அந்த தொகையை கல்லுாரி நிர்வாகத்திடம் இருந்து பெற்றுதருமாறு, மாணவனின் பெற்றோர், தாராபுரம் கோட்டாட்சியரிடம் மனு வழங்கினர்.