தாராபுரம்; வடுகப்பட்டி சுற்றுவட்டார பகுதிகளில் நாளை மின்தடை
Tirupur News- தாராபுரத்தை அடுத்துள்ள வடுகப்பட்டி சுற்றுவட்டார பகுதிகளில், மாதாந்திர பராமரிப்பு பணிக்காக, நாளை (9ம் தேதி) மின்விநியோகம் தடை செய்யப்படுகிறது.
Tirupur News,Tirupur News Today- தாராபுரம் மின் வாரிய கோட்டத்துக்கு உட்பட்ட வடுகபட்டி துணை மின்நிலையத்தில் நாளை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடக்க உள்ளது. அதனால், நாளை (9ம் தேதி) இந்த துணை மின் நிலையத்தில் மின்சார விநியோகம் தடை செய்யப்படுகிறது. நாளை (திங்கட்கிழமை) காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மின்சார விநியோகம் இருக்காது என தாராபுரம் மின்வாரியம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
வடுகபட்டி துணை மின்நிலையம்
மின்தடை பகுதிகள்; காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை
மூக்குத்தரிச்சான்பாளையம், குமாரபாளையம், சுள்ளப்பெரிக்காபாளையம், சம்மங்கரை,வண்ணாபட்டி, பட்டுத்துறை, வரப்பட்டி, வடுகபட்டி, நீலாங்காளிவலசு மற்றும் பி.ராமபட்டணம் அதுசார்ந்த பகுதிகளுக்கு மின் விநியோகம் இருக்காது என அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.