தாராபுரத்தில் ரூ.12.50 கோடியில் அரசு கலை அறிவியல் கல்லூரி கட்டுமானப் பணி; அமைச்சர் கயல்விழி ஆய்வு

Tirupur News,Tirupur News Today- தாராபுரத்தில் ரூ.12.50 கோடியில் கட்டப்பட்டு வரும் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி கட்டிட கட்டுமானப் பணிகளை, அமைச்சர் கயல்விழி ஆய்வு செய்தார்.

Update: 2023-07-03 02:05 GMT

Tirupur News,Tirupur News Today- தாராபுரத்தில், அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி கட்டுமானப் பணிகளை  அமைச்சர் கயல்விழி ஆய்வு செய்தார்.

Tirupur News,Tirupur News Today- திருப்பூர் மாவட்டம், தாராபுரத்தில் அரசு கலைக்கல்லூரி இல்லை. அதனால் தாராபுரம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளைச் சேர்ந்த மாணவ, மாணவியர் பிளஸ் டூ வகுப்பை முடித்த பிறகு பழனி, திருப்பூர், கோவை போன்ற தொலைதூர நகரங்களுக்கு கல்லூரி படிப்பை தேடிச் செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டது. போக்குவரத்து சிரமங்கள், அதிக செலவு காரணமாக ஏழை மற்றும் நடுத்தரக் குடும்பங்களை சேர்ந்த மாணவ, மாணவியர் மேற்கொண்டு கல்லூரி செல்ல வாய்ப்பின்றி, பள்ளி இறுதி வகுப்புடன், மேல்படிப்பு கனவை நிராகரிக்க வேண்டிய நிர்பந்தம் ஏற்பட்டது.

இதையடுத்து, தாராபுரத்தில் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி ஏற்படுத்தவும், அதற்காக நிதி ஒதுக்கவும் தமிழக அரசு நடவடிக்கை எடுத்தது. தாராபுரத்தில் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி கட்டுமான பணிக்கு அரசு ரூ.12 .50கோடி நிதி ஒதுக்கீடு செய்தது. அதற்கான கட்டுமான பணிகளை தாராபுரம் ஐ.டி.ஐ. வளாகத்தில் கடந்த டிசம்பர் மாதம் செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் மற்றும் ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சர் கயல்விழி செல்வராஜ் ஆகியோர் பூமிபூஜை செய்து தொடங்கி வைத்தனர்.

அதன் முதற்கட்ட கட்டுமானப் பணி தொடங்கி நடந்து வருகிறது. கல்லூரி கட்டிட கட்டுமான பணிகள் குறித்து, அமைச்சர் கயல்விழி  அதிகாரிகளுடன் ஆய்வு மேற்கொண்டார். 

அப்போது அவர் கூறியதாவது,

தாராபுரத்தில் அரசு கலைக்கல்லூரி அமைக்க வேண்டும் என தேர்தல் வாக்குறுதியில் கூறியது போல தற்போது பணிகள் நடந்து வருகிறது. அரசு கலைக்கல்லூரி கட்டிடம் நிர்ணயிக்கப்பட்ட ஒரு ஆண்டுக்குள் கட்டி முடிக்கப்பட வேண்டும் என ஒப்பந்ததாரருக்கு அமைச்சர் அறிவுரை வழங்கினார். மேலும் கட்டுமான பணிகளுக்கு தரமான சிமெண்ட் மற்றும் கட்டுமான பொருட்களை கொண்டு கட்ட வேண்டும். இன்று கட்டும் கல்லூரி கட்டிடம், 100 ஆண்டுகளை கடந்தாலும் உறுதி தன்மையுடன் இருக்க வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

ஆய்வின்போது ஆர்.டி.ஓ.செந்தில் அரசன், தாராபுரம் தாசில்தார் ஜெகஜோதி, தாராபுரம் தி.மு.க ஒன்றிய செயலாளரும், ஊராட்சி ஒன்றிய குழுத்தலைவருமான எஸ்.வி.செந்தில்குமார், மாநில செயற்குழு உறுப்பினர் கே.எஸ்.தனசேகர், பொதுக்குழு உறுப்பினர் சிவக்குமார், மாவட்ட அமைப்பாளர் வக்கீல் கே.செல்வராஜ் உள்பட நிர்வாகிகள் பலர் உடன் இருந்தனர்.

Tags:    

Similar News