முதல்வரின் தாயை இழிவுபடுத்தி பேசியது கண்டனத்திற்குரியது என திருப்பூர் மாவட்டம் தாராபுரத்தில் பிரதமர் மோடி பேசினார்.
திருப்பூர் மாவட்டம் தாராபுரத்தில் தேசிய ஜனநாயகக் கூட்டணி சார்பில் தேர்தல் பிரச்சார பொதுக்கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் பிரதமர் நரேந்திர மோடி கலந்து கொண்டார். கூட்டத்தில் பேசிய பிரதமர் மோடி, காங்கிரஸ், தி.மு.க வின் தாக்குதல் என்பது பெண்கள் மீது உள்ளது. நான், அநீதிக்கு எதிராக எந்த சமரசமும் இல்லாத சகோதர, சகோதரிகளின் நிலத்தில் இருக்கிறேன்.
காங்கிரஸ் மற்றும் தி.மு.கவினர் தமிழக முதல்வரின் தாயார் குறித்து அவதூறாக பேசியுள்ளனர். அவர்கள் ஆட்சிக்கு வந்தால் அனைத்து பெண்களையும் அவதூறாக பேசுவார்கள். கடந்த சில தினங்களுக்கு முன்னர் திண்டுக்கல் லியோனி, பெண்கள் குறித்து அவதூறான கருத்துகளைப் பேசியுள்ளார். தி.மு.க தலைமை அதனைக் கண்டிக்கவில்லை.கடந்த 1989-ம் ஆண்டு மார்ச் 25-ம் தேதி தமிழக சட்டமன்றத்தில் தி.மு.க தலைவர்கள், ஜெயலலிதாவிடம் நடந்து கொண்டது குறித்து நினைத்துப் பார்க்க முடியவில்லை. இவ்வாறு அவர் பேசினார்.