நகைக்கடன் தள்ளுபடி ரத்து: ஏலம் விட தயாராகும் வங்கிகள்

நகைக்கடன் தள்ளுபடி ரத்து சலுகை பெறாதவர்களின் நகைகளை, வங்கிகள் ஏலம் விடுவதற்கான நடவடிக்கையை எடுத்துள்ளது.

Update: 2022-02-09 12:30 GMT

நகைக்கடன் தள்ளுபடி ரத்து சலுகை பெறாதவர்களின் நகைகளை வங்கிகள், ஏலம் விடுவதற்கான நடவடிக்கையை எடுத்துள்ளதால், பொதுமக்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.

'கூட்டுறவு வங்கிகளில் பெற்ற பயிர்க்கடன், நகைக்கடன் ஆகியவை தள்ளுபடி செய்யப்படும்' என தி.மு.க., தேர்தல் வாக்குறுதி அளித்திருந்தது. ஆட்சி பொறுப்பேற்ற பின், இதுதொடர்பான ஆய்வுகளை மேற்கொண்டது. பல மாவட்டங்களில் ஒரே நபர் ஏராளமான கடன்களை பெற்றிருப்பதும், போலி நகைகளை அடமானமாக வைத்து கடன் பெற்றிருப்பதும், நகையே பெறாமல் வங்கியினர் கடன் கொடுத்தது என, பல முறைகேடுகள் கண்டறியப்பட்டன.

'ஐந்து சவரனுக்கு கீழ் நகைக்கடன் பெற்றவர்களுக்கு தள்ளுபடி வழங்கப்படும்' எனக்கூறி, அதற்கான அரசாணையை மாநில அரசு வெளியிட்டது. இதற்கிடையில், தள்ளுபடி சலுகை மறுக்கப்பட்ட வாடிக்கையாளர்களுக்கு அந்தந்த கூட்டுறவு வங்கியினர் மொபைல் போனில் அழைப்பு விடுத்து, 'தங்களுக்கு தள்ளுபடி சலுகை இல்லை; நகைக்குரிய வட்டியை செலுத்திவிடுங்கள்.

தவறும்பட்சத்தில், நகைகள் ஏலம் விடப்பட்டு விடும்' என தெரிவித்து, வட்டி செலுத்த காலக்கெடு வழங்கி வருகின்றனர். இதனால், மக்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர். மக்களின் அதிருப்தியை சாதகமாக்கி ஓட்டுகளை பெற அ.தி.மு.க.,வினர் தயாராகி வருகின்றனர்.

Tags:    

Similar News