ருத்ராவதி பேரூராட்சியில் சும்மா கிடக்குது பேருந்து நிலையம்

ருத்ராவதி பேரூராட்சியில் பயனற்று கிடக்கும் பேருந்து நிறுத்தத்தை பயன்பாட்டுக்கு கொண்டு வர வேண்டும் என மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்

Update: 2021-11-17 10:30 GMT

தாராபுரம், ருத்ராவதி பேரூராட்சியில், பயனற்றுக் கிடக்கும் பேருந்து நிறுத்தம்.

தாராபுரம், ருத்ராவதி பேரூராட்சியில், பயனற்று கிடக்கும் பேருந்து நிறுத்தத்தை பயன்பாட்டுக்கு கொண்டு வர வேண்டும் என மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். தாராபுரம், குண்டடம் ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட ருத்ராவதி பேரூராட்சியில், கடந்த, 1999ம் ஆண்டு, 1.5 ஏக்கர் நிலம் நன்கொடையாக பெறப்பட்டு, அங்கு பேருந்து நிறுத்தம் கட்டப்பட்டது. பணி முடிந்து, கடந்த 2015ம் ஆண்டு, பயன்பாட்டுக்கு திறந்து விடப்பட்டது.

இங்கு, 8 கடைகள், மழைநீர் சேகரிப்பு கட்டமைப்பு, பெண்கள் பாலுாட்டும் அறை, கழிப்பிடம் உள்ளிட்ட கட்டமைப்புகள் ஏற்படுத்தப்பட்டன. 6 லட்சம் ரூபாய் செலவில், 'ஐமாஸ்' விளக்கும் பொருத்தப்பட்டது. ஆனால், இந்த பேருந்து நிறுத்தம், பயனற்று, புதர்மண்டிக் கிடக்கிறது. சமூக விரோதிகளின் கூடாரமாக மாறியுள்ளது. எனவே, இந்த பயணிகள் நிறுத்தத்தை, மக்கள் பயன்பாட்டுக்கு கொண்டு வர வேண்டும் என மக்கள் எதிர்பார்க்கின்றனர். இது தொடர்பாக, ஆதித்தமிழர் ஜனநாயக பேரவையினர், பேரூராட்சி நிர்வாகத்துக்கு மனுவும் வழங்கியுள்ளனர்.

Tags:    

Similar News