தாராபுரத்தில் நடைபெற்ற புத்தக கண்காட்சி
தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர்கள் மற்றும் கலைஞர்கள் சங்கத்தின் சார்பில், 8 வது புத்தக கண்காட்சி தாராபுரத்தில் நடந்தது.;
தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர்கள் மற்றும் கலைஞர்கள் சங்கத்தின் சார்பில், 8 வது புத்தக கண்காட்சி தாராபுரத்தில் நடந்தது. சங்க தலைவர் தங்கவேல், தலைமை வகித்தார். செயலாளர் சீதாராமன், வரவேற்று பேசினார். ஆதி திராவிடர் நலத்துறை அமைச்சர் கயல்விழி, புத்தக கண்காட்சியை துவக்கி வைத்தார். தமிழ் கலை மன்ற தலைவர் ஆறுச்சாமி, ஊராட்சி ஒன்றிய குழு தலைவர் செந்தில்குமார், திருப்பூர் தெற்கு மாவட்ட காங்கிரஸ் கமிட்டி தலைவர் வக்கீல் தென்னரசு, மா.கம்யூ., தாலுகா செயலாளர் கனகராஜ் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்