தரைப்பாலத்தை தாண்டி மழை வெள்ளம்
தாராபுரத்தில் தொடர் மழை பெய்து வருவதால், தரைப்பாலத்தை தாண்டி வெள்ளம் வழிந்தோடுகிறது.;
திருப்பூர் மாவட்டம், தாராபுரத்தில், சமீபநாட்களாக தொடர் மழை பெய்து வருகிறது. தாராபுரம் – கொளத்துப்பாளையம் பேரூராட்சி, ஆத்துக்கால்புதுாரில் உள்ள அமராவதி ஆற்றில் தரைபாலத்தை தொட்டவாறு, வெள்ளம் கரைபுரண்டு ஓடுகிறது. இதையடுத்து, ஆத்துக்கால்புதுார் பகுதி மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.