முகத்தை காட்ட சொன்னதால் பரபரப்பு: வாக்குப்பதிவு நிறுத்தம்
தாராபுரத்தில், பர்தா அணிந்திருந்த பெண்களின் முகத்தை காண்பிக்க சொன்னதால், வாக்குவாதம் ஏற்பட்டது.
திருப்பூர் மாவட்டம், தாராபுரம், 17வது வார்டு, வலைக்கார வீதியில் உள்ள அரசு நடுநிலைப்பள்ளியில், வாக்களிப்பதற்காக, இஸ்லாமிய பெண்கள் பெருமளவில் வந்தனர். பர்தா அணிந்திருந்த அவர்களின் முகத்தை காண்பிக்கும் படி, வாக்குப்பதிவு மைய அலுவலர்கள் கூறியதால், பெண்கள் ஆட்சேபனை தெரிவித்தனர். இதனால், இரு தரப்பினருக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. இதனால் சிறிது நேரம் வாக்குப்பதிவு நிறுத்தப்பட்டது.