அடிப்படை வசதி அறவே இல்லை! அமைச்சரிடம் புகார் மனு
‘தாராபுரத்தில், அடிப்படை வசதி செய்து கொடுக்க வேண்டும்’ என ஆதி திராவிடர் நலத்துறை அமைச்சரிடம் புகார் தெரிவிக்கப்பட்டது.;
திருப்பூர் மாவட்டம், தாராபுரம் தவ்ஹீத் ஜமாஅத் கிளை சார்பில், ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை அமைச்சர் கயல்விழியிடம் வழங்கப்பட்ட மனுவில் கூறியுள்ளதாவது:
30வது வார்டு பகுதியில் சாக்கடை வசதி, கான்கிரீட் சாலை இல்லாததால், மக்கள் சிரமப்படுகின்றனர். அங்குள் பாழடைந்த கிணற்றை உடனடியாக மூட வேண்டும். 5 மற்றும், 6 வது வார்டில், சமுதாயக்கூடம் அமைத்துத்தர வேண்டும். ஜின்னா மைதானம் பகுதியில் உள்ள காலியிடத்தில், கான்கிரீட் தளம் அமைக்க வேண்டும் என்பது உள்ளிட்ட அப்பகுதியில் உள்ள பிரச்னைகள் குறித்து விளக்கப்பட்டிருந்தது.