தாராபுரத்தில் கொலை வழக்கில் கைதானவர்கள் மீது குண்டர் தடுப்பு சட்டம்
தாராபுரத்தில், கொலை வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவர்கள் மீது, குண்டர் சட்டம் பாய்ந்தது.;
திருப்பூர் மாவட்டம், தாராபுரம், உடுமலை சாலையில், திருமலைப்பாளையம் பகுதியில் உள்ள காலி வீட்டுமனை இடத்தில், கடந்த, ஆக., 18 ம் தேதி, 25 வயது இளைஞர் வெட்டுக்காயங்களுடன் மீட்கப்பட்டார். இதுதொடர்பாக, அலங்கியம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வந்தனர்.
கொலையுண்டவர், விருதுநகர் மாவட்டம், அல்லம்பட்டியைச் சேர்ந்த விக்னேஷ், 25,என்பது தெரிய வந்தது. இந்த கொலை வழக்கில் தொடர்புடைய விருதுநகர் மாவட்டம், அல்லம்பட்டியை சேர்ந்த ஏஞ்சல் செல்வம், 23, அதே பகுதியைச் சேர்ந்த, மணிகண்டன், 23, பாண்டியன் நகரைச் சேர்ந்த பாஸ்கர், சிவகாசியைச் சேர்ந்த காளி, 36, அதே பகுதியை சேர்ந்த ரமேஷ் குமார், 33 ஆகிய, ஐந்து பேரை கைது செய்து, கோவை மத்திய சிறையில் அடைத்தனர். அவர்கள் மீது, குண்டர் தடுப்புக்காவல் சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்ய திருப்பூர் மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டார்.