அமராவதி அணையில் இருந்து தண்ணீர் திறப்பு
நெல் சாகுபடிக்காக ஏப்., 24ம் தேதி வரை உரிய இடைவெளி விட்டு, 65 நாட்களில் 281 மில்லியன் கன அடி நீர் வழங்கப்படும்.
உடுமலை அமராவதி அணையிலிருந்து, பழைய ஆயக்கட்டு பாசனத்திற்குட்பட்ட, கல்லாபுரம், ராமகுளம் கால்வாயில், இரண்டாம் போகம் நெல் சாகுபடிக்கு தண்ணீர் திறக்கப்பட்டது. இதன் வாயிலாக, 2,834 ஏக்கர் நிலம் பாசன வசதி பெறும். நெல் சாகுபடிக்காக, நேற்று முதல், வரும், ஏப்., 24ம் தேதி வரை, உரிய இடைவெளி விட்டு, 65 நாட்களில், 281 மில்லியன் கன அடி நீர் வழங்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர். தண்ணீர் திறப்பு நிகழ்ச்சியில், அமைச்சர் கயல்விழி மற்றும் விவசாயிகள், அதிகாரிகள் பங்கேற்றனர். அமராவதி அணையில் நேற்றைய, நிலவரப்படி, மொத்தமுள்ள, 90 அடியில், 88.13 அடி நீர்மட்டம் இருந்தது.