உயிர்களை காவு வாங்கும் அமராவதி ஆறு: அறிவிப்பு பலகை வைத்து எச்சரிக்கை

திருப்பூர் மாவட்டம், அமராவதி ஆற்றில் குளிக்க சென்று, சேற்றில் சிக்கி ஆறு மாணவர்கள் உயிரிழந்த நிலையில்அபாய எச்சரிக்கை பலகை வைக்கப்பட்டுள்ளது.

Update: 2022-01-19 13:15 GMT

அமராவதி ஆற்றங்கரையில் வைக்கப்பட்டுள்ள எச்சரிக்கை பலகை.

திருப்பூர் மங்கலம் ரோடு இடுவாய் அருகில் உள்ள அண்ணாமலை கார்டனை சேர்ந்த, 30 பேர்; திண்டுக்கல் மாவட்டம், மாம்பாறை பகுதியில் கோவில் வழிபாட்டுக்கு சென்று திரும்பிக் கொண்டிருந்தனர். வழியில், மோகன் 17, ரஞ்சித் 20, அமிர்தகிருஷ்ணன் 18, யுவன் 19, சக்கரவர்மன் 18, ஸ்ரீதர் 17, ஆகியோர், திருப்பூர் மாவட்டம், அமராவதி ஆற்றில் குளிக்க சென்ற போது, நீரில் மூழ்கி பரிதாபமாக பலியாகினர்.

இதையடுத்து, கவுண்டச்சிபுதுர் ஊராட்சி நிர்வாகம் மற்றும் தாராபுரம் காவல் துறையினர் சார்பில், அங்கு அபாய எச்சரிக்கை அறிவிப்பு வைக்கப்பட்டுள்ளது. ஊராட்சி தலைவர் செல்விரமேஷ், துணை தலைவர் நாச்சிமுத்து, வார்டு உறுப்பினர்கள் நர்மதா, தனலட்சுமி, ஊராட்சி செயலாளர் பெரியசாமி, காவல் ஆய்வாளர் மணிகண்டன் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

காவல்துறை அதிகாரிகள் கூறுகையில், 'இளைஞர்கள் நீரில் மூழ்கிய இடத்தில் இருந்து, மர்மநபர்கள் மணல் எடுப்பதை வழக்கமாக கொண்டுள்ளனர். தொடர்ச்சியாக ஆற்று மணலை அள்ளியதால் அந்த இடத்தில் பள்ளம் ஏற்பட்டு, புதைக்குழி ஏற்பட்டுள்ளது. இதுதான், உயிர்பலி ஏற்பட காரணம்,' என்றனர்.

Tags:    

Similar News