தாராபுரத்தில் அ.தி.மு.க நிர்வாகிகள் தி.மு.க.வில் தஞ்சம்
தாராபுரத்தில், அ.தி.மு.க. நிர்வாகிகள், தி.மு.க.வில் இணைந்துள்ளனர்.;
திருப்பூர் மாவட்டத்தில் அதிமுகவில் இருந்து பலர் திமுகவில் இணையும் போக்கு அதிகரித்து வருகிறது. அவ்வகையில், தாராபுரத்தில், அ.தி.மு.க. தொழிற்சங்க பேரவை மாநில தலைவர் சோமசுந்தரம் தலைமையில், 100க்கும் மேற்பட்டவர்கள், தி.மு.க.,வில் இணைந்தனர்.
இவர்கள் அனைவரும், ஆதி திராவிடர் நலத்துறை அமைச்சர் கயல்விழிசெல்வராஜ் முன்னிலையில், தங்களை தி.மு.க.,வில் இணைத்துக் கொண்டனர். அவர்களுக்கு திமுக நிர்வாகிகள் பொன்னாடை போர்த்தி வரவேற்பு தந்தனர்.