தொழில் பழகுநர்களுக்கான ‘அப்ரண்டிஸ்’ சேர்க்கை; தாராபுரத்தில் நாளை நடக்கிறது

Tirupur News,Tirupur News Today-திருப்பூர் மாவட்ட அளவில், தொழில் பழகுநர்களுக்கான ‘அப்ரண்டிஸ்’ சேர்க்கை முகாம், தாராபுரம் அரசினர் தொழிற்பயிற்சி நிலைய வளாகத்தில், நாளை (14-ம் தேதி) நடக்கிறது.;

Update: 2023-08-13 11:35 GMT
தொழில் பழகுநர்களுக்கான ‘அப்ரண்டிஸ்’ சேர்க்கை; தாராபுரத்தில் நாளை நடக்கிறது

Tirupur News,Tirupur News Today- தாராபுரம் அரசினர் தொழிற்பயிற்சி நிலையம் (கோப்பு படம்)

  • whatsapp icon

Tirupur News,Tirupur News Today-இதுகுறித்து, திருப்பூர் மாவட்ட கலெக்டர் கிறிஸ்துராஜ் கூறியிருப்பதாவது, 

பிரதமர் தேசிய தொழிற் பழகுநர் சேர்க்கை முகாம் - தொழில் பழகுநர் ஊக்குவிப்பு திட்டத்தின் கீழ் தமிழ்நாடு அரசு வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறை மற்றும் மத்திய அரசின் பொது பயிற்சி இயக்ககம் இணைந்து நடத்தும் திருப்பூர் மாவட்ட அளவில் தொழில் பழகுநர்களுக்கான ‘அப்ரண்டிஸ்’ சேர்க்கை முகாம், தாராபுரம் அரசினர் தொழிற்பயிற்சி நிலைய வளாகத்தில் நாளை 14-ம் தேதி (திங்கட்கிழமை ) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரையில் நடைபெற உள்ளது.

இம்முகாமில் மத்திய - மாநில அரசு நிறுவனங்கள், பொதுத்துறை நிறுவனங்கள் மற்றும் கோயம்புத்தூர் ,திருப்பூர், ஈரோடு ஆகிய மாவட்டங்களில் உள்ள தனியார் துறை நிறுவனங்களும் பங்கேற்று தங்கள் நிறுவனங்களில் உள்ள காலியிடங்களை நிரப்ப உள்ளனர். இதில் பங்கேற்று தேர்வு பெற்றவர்களுக்கு தொழில் பழகுநர் பயிற்சி அளிக்கப்பட்டு மத்திய அரசின் தேசிய தொழில் பழகுநர் சான்றிதழ் வழங்கப்படும்.

தேசிய தொழில் பழகுநர் சான்றிதழ் பெற்றவர்களுக்கு அரசு மற்றும் தனியார் நிறுவனங்களில் வேலையில் முன்னுரிமை வழங்கப்படும்.

மேலும் வெளிநாட்டு வேலைவாய்ப்புகளில் முன்னுரிமை கிடைக்கிறது. தொழில் பழகுநர்களுக்கான உதவித்தொகை தொழில் பிரிவுகளுக்கு ஏற்ப கிடைக்கும். அரசு மற்றும் தனியார் தொழிற்பயிற்சி நிலையங்களில்என்சிவிடி.எஸ்சிவிடி., திட்டத்தின் கீழ் தொழில் பயிற்சி பெற்றவர்கள் மற்றும் அடிப்படை பயிற்சியுடன் வேலைவாய்ப்பு பெற விருப்பமுள்ள 8,10,11மற்றும் 12-ம் வகுப்பு முடித்த தகுதி வாய்ந்தவர்கள் உரிய அசல் சான்றிதழ்கள் மற்றும் ஆவணங்களுடன் பங்கேற்கலாம்.

மேலும் விவரங்கள் அறியும் பொருட்டு பயிற்சியாளர்கள் மற்றும் நிறுவனங்கள், மாவட்ட உதவி இயக்குநர், மாவட்ட திறன் பயிற்சி அலுவலகம், எண்- 115, 2வது தளம், காமாட்சியம்மன் கோவில் வீதி, பழைய பஸ் ஸ்டாண்ட் பின்புறம், திருப்பூர் என்ற முகவரியிலும்,

இம்மாவட்டத்தில் உள்ள அரசினர் தொழிற்பயிற்சி நிலைய முதல்வர்களை ( திருப்பூர், தாராபுரம் மற்றும் உடுமலைப்பேட்டை ) ( 9499055695 ,0421-2230500, 9894783226 , 9499055700, 9499055696, 9944739810 , 9442178340 , 9842481456 ,770843777 , 9442651468) ஆகிய தொலைபேசி எண்கள் வாயிலாகவும் தொடர்பு கொண்டு அறிந்து கொள்ளலாம் என, மாவட்ட கலெக்டர் கிறிஸ்துராஜ் தெரிவித்துள்ளார். 

Tags:    

Similar News