சான்றிதழ் வாங்க அலைகழிப்பதாக குற்றச்சாட்டு

சான்றிதழ் வாங்க அலைகழிக்கப்படுவதாக, சி.ஐ.டி.யு., தொழிற்சங்கத்தினர் தெரிவித்துள்ளனர்.;

Update: 2021-12-22 13:00 GMT

பைல் படம்.

தாராபுரம் தாலுகா, பொது தொழிலாளர் சங்கம் (சிஐடியூ) சார்பில், அதன் தாலுகா செயலாளர் பி.பொன்னுச்சாமி, கோட்டாச்சியரிடம் வழங்கிய மனுவில் கூறியுள்ளதாவது;

அமைப்புசாரா தொழிலாளர் நல வாரியங்கள் மூலம் தொழிலாளர்கள் ஓரளவு பாதுகாப்பு மற்றும் பலன் பெற்று வருகின்றனர். நலவாரிய பதிவுகளை ஆன்லைன் முலம் செய்து வருகிறோம். தற்சமயம் கொரோனா மற்றும் வெள்ள பாதிப்புகளையொட்டி தொழிலாளர்கள் நலவாரியத்தில் பதிவு செய்வதற்காகவும், புதுப்பிப்பதற்காகவும் அதிகளவு வருகின்றனர்.

ஆன்லைன் முலம் செய்யும் பதிவுகளை சரிபார்ப்பிற்காக நலவாரிய அலுவலகத்திலிருந்து, கிராம நிர்வாக அலுவலர்களுக்கு அனுப்பி வைக்கப்படுகிறது. தாராபுரம் வட்டார கிராம நிர்வாக அலுவலர்கள், முறையான எந்த விசாரணையுமின்றி, எந்த காரணமும் இல்லாமல் தகுதியுள்ள பதிவுகளை கூட தள்ளுபடி செய்கின்றனர். உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். இவ்வாறு, அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.

Tags:    

Similar News