தாராபுரத்தில் வாகனச்சோதனையில் ரூ.40 லட்சம் பணம் பறிமுதல் - ஹவாலா பணமா என விசாரணை

திருப்பூர் மாவட்டம் தாராபுரத்தில் வாகனச்சோதனையில் 40 லட்சம் பணத்தை போலீசார் பறிமுதல் செய்தனர்.

Update: 2021-06-11 02:11 GMT

திருப்பூர் மாவட்டம் தாராபுரம் அருகே, பொள்ளாச்சி ரோட்டில் போலீசார் வாகனச்சோதனையில் ஈடுபட்டு இருந்தனர்.  அப்போது, அந்தவழியாக வந்த லாரியை நிறுத்தி சோதனையிட்டனர். இதில், லாரியில் இருந்த  ஒரு பண்டலில் கட்டுக்கட்டாக பணம் இருந்தது தெரியவந்தது.

அந்த பணம் குறித்து டிரைவரிடம் போலீசார் விசாரித்தனர். அந்த பணத்தை பறிமுதல் எண்ணியபோது ரூ.39 லட்சத்து 75ஆயிரம் இருந்தது. பணம் குறித்து லாரி டிரைவர் கேரள மாநிலம் கோழிக்கோட்டை சேர்ந்த ராகவன் ( 56) என்பவரை  அழைத்து வந்து விசாரித்தனர்.

விசாரணையில் கரூர் மாவட்டம் புலியூரில் உள்ள தனியார் சிமெண்ட் ஆலையில் இருந்து சிமெண்ட் மூட்டைகளை லாரியில் ஏற்றிக்கொண்டு கேரள மாநிலம் கோழிக்கோடுக்கு சென்றதாகவும்,  நண்பர் ஒருவர் தன்னிடம் ரூ.39 லட்சத்து 75ஆயிரம் பணத்தை வழங்கி,கோழிக்கோட்டில் உள்ள உறவினர் ஒருவரிடம் கொடுத்து விட சொன்னதாக தெரிவித்தார்.

பறிமுதல் செய்யப்பட்டவை ஹவாலா பணமா என்பது குறித்து தாராபுரம் போலீஸ் இன்ஸ்பெக்டர் மகேந்திரன், சப்-இன்ஸ்பெக்டர்கள் ஜெயகுமார், கார்த்திக்கேயன் ஆகியோர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News