தாராபுரம் கல்வி மாவட்டத்தின் மாவட்ட கல்வி அலுவலர் பொறுப்பேற்று கொண்டார்.
திருப்பூர் மாவட்டம் தாராபுரம் கல்வி மாவட்டத்தின் மாவட்ட கல்வி அலுவலராக ராஜகோபால் பொறுப்பேற்றுக் கொண்டார். இவர் சேலம் மாவட்டம் கொண்டப்ப நாயக்கன்பட்டி அரசு உயர்நிலைப்பள்ளியில் தலைமை ஆசிரியராக பணியாற்றி வந்துள்ளார். பதவி உயர்வில் மாவட்ட கல்வி அலுவலராக தற்போது பொறுப்பேற்றுள்ளார். புதிதாக பொறுப்பேற்ற இவரது கண்காணிப்பின் கீழ் தாராபுரம் மூலனூர் வெள்ளகோவில் பகுதிகளைச் சேர்ந்த அரசுப் பள்ளிகள், நகராட்சி பள்ளிகள், அரசு உதவி பெறும் பள்ளிகள், சுயநிதி பள்ளிகள், மெட்ரிகுலேஷன் பள்ளி உள்ளிட்ட 496 பள்ளிகள் வருகிறது. மரியாதை நிமித்தமாக பள்ளித் தலைமையாசிரியர்கள் மற்றும் ஆசிரியர் ஆசிரியைகள் சால்வை அணிவித்து தங்களது வாழ்த்துக்களை தெரிவித்துக் கொண்டனர்.