‘டிஜிட்டல் இந்தியா’ குறித்து கடிதம் எழுத, அஞ்சல் துறை அழைப்பு

Tirupur News,Tirupur News Today- இந்திய அஞ்சல் துறை சார்பில், ‘டிஜிட்டல் இந்தியா’ என்ற தலைப்பில், கடிதம் எழுதும் போட்டி நடத்தப்படுகிறது.;

Update: 2023-08-10 16:08 GMT

Tirupur News,Tirupur News Today- ‘டிஜிட்டல் இந்தியா’ என்ற தலைப்பில், கடிதம் எழுத அழைக்கிறது, இந்திய தபால் துறை (கோப்பு படம்)

Tirupur News,Tirupur News Today- இந்திய தபால்துறை சார்பில், புதிய இந்தியாவுக்கான ‘டிஜிட்டல் இந்தியா’ என்னும் தலைப்பில், கடிதம் எழுதும் பிரசாரம் மற்றும் போட்டி நடத்தப்படுகிறது.

இப்போட்டியில் 'ஏ4' தாளில், கையால் எழுதப்படும் கடிதம் மட்டுமே ஏற்றுக்கொள்ளப்படும். தாளில் அனுப்புவது ஆயிரம் வார்த்தைகளுக்கு மிகாமல் இருக்க வேண்டும். இன்லாண்ட் லெட்டரில் அனுப்பும் கடிதம், 500 வார்த்தைகளுக்குள் இருத்தல் வேண்டும். கடிதங்களை தமிழ், ஆங்கிலம் இந்திய மொழிகளில் எழுதி அனுப்பலாம்.

போட்டியில் பங்கு பெறுபவர், பெயர், இருப்பிட முகவரியை கட்டாயம் குறிப்பிட வேண்டும். 18 வயது நிறைவு பெற்றவர், பெறாதவர் என்பதை அறிய நிச்சயம் வயது சான்றிதழ் இணைக்கப்பட வேண்டும்.

கடிதங்களை அனுப்ப வேண்டிய முகவரி: முதன்மை தபால் துறைத் தலைவர், சென்னை 600 002.

கடிதங்கள், வரும் அக்டோபர் மாதம் 31 -ம் தேதிக்குள், மேலே குறிப்பிட்டுள்ள முகவரிக்கு சென்று சேர வேண்டும். குறிப்பிட்டுள்ள கால அவகாசத்துக்கு பின் வரும் கடிதங்கள் ஏற்றுக்கொள்ளப்பட மாட்டாது. தேசிய அளவில் முதல் பரிசு பெறுவோருக்கு ரூ. 50 ஆயிரம், இரண்டாவது பரிசு 25 ஆயிரம், மூன்றாவது பரிசு 10 ஆயிரம். வழங்கப்பட உள்ளது.

அதே போல், மாநில அளவில் வெற்றி பெறுவோருக்கு முதல் பரிசு ரூ. 25 ஆயிரம், இரண்டாவது மற்றும் மூன்றாவது பரிசு முறையே 10 ஆயிரம் மற்றும் 5,000 ரூபாய் என ரொக்க பரிசுகள் வழங்கப்படுகிறது.

மேலும் இதுபற்றிய கூடுதல் விவரங்களுக்கு, அருகில் உள்ள தலைமை தபால் அலுவலகத்தை நாடலாம் என, திருப்பூர் தலைமை தபால் கோட்ட கண்காணிப்பாளர் விஜய தனசேகர் தெரிவித்துள்ளார்.

Tags:    

Similar News