பூட்டிய வீட்டுக்குள் பலத்த காயங்களுடன் பெண் சடலம்; போலீசார் விசாரணை
Police Investigation -பல்லடம் அருகே பூட்டிய வீட்டிற்குள், காயங்களுடன் கிடந்த பெண் சடலத்தை கைபற்றிய போலீசார், விசாரிக்கின்றனர்.;
Police Investigation -பல்லடம் அருகே உள்ள வெட்டுப்பட்டான் குட்டை பகுதியை சேர்ந்தவர் வெள்ளியங்கிரி. இவரது வீட்டுக்கு, ராஜா என்பவர் கடந்த ஒரு மாதம் முன்பு, வாடகைக்கு குடிவந்துள்ளார். இந்நிலையில் கடந்த 5 நாட்களுக்கு மேலாக வீடு பூட்டப்பட்டு இருந்தது. வீட்டிற்குள் இருந்து துர்நாற்றமும் வீசியது. இதையடுத்து, அருகில் வசிக்கும் சிலர், வெள்ளியங்கிரிக்கு தகவல் கொடுத்தனர். அவர் வாடகைக்கு வசித்த ராஜாவின் செல்போனை தொடர்பு கொண்டபோது, 'ஸ்விட்ச் ஆப்' செய்யப்பட்டிருந்தது.
இதையடுத்து பல்லடம் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. உடனே அந்த வீட்டிற்கு பல்லடம் டி.எஸ்.பி சவுமியா, இன்ஸ்பெக்டர் மணிகண்டன் மற்றும் போலீசார் வந்தனர். பின்னர் கதவின் பூட்டை உடைத்து உள்ளே சென்றனர். அங்கு கழுத்து மற்றும் தாடை பகுதியில் பலத்த காயங்களுடன், ரத்த வெள்ளத்தில் 30 வயது மதிக்கத்தக்க ஒரு பெண் சடலம் கிடந்தது. பெண் சடலத்தை கைபற்றிய போலீசார், திருப்பூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
சடலமாக கிடந்த பெண் குறித்த எந்த தகவலும் தெரியாத நிலையில், இந்த மர்ம மரணம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரிக்கின்றனர்.
அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2