பார்சல் அனுப்புவதாக ஏமாற்றி, ரூ.16 லட்சம் மோசடி

Money Fraud- லண்டனில் இருந்து டாலர், நகைகளை பார்சலில் அனுப்புவதாக ஏமாற்றி, திருப்பூரில் பனியன் நிறுவன உரிமையாளரிடம் ரூ.16 லட்சம் அபகரித்த மோசடி நபர் குறித்து, சைபர் க்ரைம் போலீசார் விசாரிக்கின்றனர்.

Update: 2022-08-05 01:17 GMT

லண்டனில் இருந்து பார்சல் அனுப்புவதாக, பனியன் நிறுவன உரிமையாளரிடம் ரூ. 16 லட்சம் ஏமாற்றிய நபர்கள் குறித்து, திருப்பூர் போலீசார் விசாரிக்கின்றனர்.

Money Fraud- திருப்பூர் சாமுண்டிபுரத்தை சேர்ந்தவர் மணிவண்ணன் (வயது 34). பனியன் நிறுவன உரிமையாளர். முகநுாலில் லண்டனை சேர்ந்த ஒருவர், மணிவண்ணனுக்கு அறிமுகமானார். இருவரும் முகநுால் நண்பர்களான நிலையில், அந்த நபர் மணிவண்ணனுக்கு, லண்டன் நாட்டின் டாலர் மற்றும் நகைகளை பரிசாக தருவதாகவும், அதை பார்சல் மூலம் அனுப்பியதாகவும் கூறியுள்ளார்.இதை நம்பிய மணிவண்ணன், லண்டனில் இருந்து பரிசு வரும் என்று எதிர்பார்த்து காத்திருந்தார்.

இந்நிலையில், மணிவண்ணனின் மொபைல்போன் எண்ணுக்கு அழைத்து பேசிய நபர், டெல்லி விமான நிலைய சுங்கத்துறை அதிகாரி என்றும், 'உங்களுக்கு வந்த பார்சல் சட்டவிரோதமானது. அதில் ரூ.80 லட்சம் மதிப்புள்ள பொருட்கள் உள்ளது, இதை பாதுகாப்பாக பெற, பணம் கொடுக்க வேண்டும் என்றும் கூறியுள்ளார். கொஞ்சம், கொஞ்சமாக அந்த நபர், மணிவண்ணனிடம் இருந்து ரூ.16 லட்சம் வரை பெற்றுள்ளார். ஆனால், மணிவண்ணனுக்கு பார்சல் வந்து சேரவில்லை. தான் ஏமாற்றப்பட்டதை அறிந்த மணிவண்ணன் இதுகுறித்து திருப்பூர் மாநகர சைபர் க்ரைம் போலீசில் புகார் அளித்தார்.

வழக்குபதிவு செய்த போலீசார், லண்டன் முகநுால் நண்பர் மற்றும் சுங்கத்துறை அதிகாரி போல் பேசிய மோசடி நபர்கள் குறித்து விசாரிக்கின்றனர்.


அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2

Tags:    

Similar News