பல்லடம் காவல் நிலையத்தில் 6 போலீசாருக்கு கொரோனா பெருந்தொற்று
பல்லடம் போலீஸ் ஸ்டேஷனில் பணிபுரியும் ஆறு காவலர்களுக்கு, கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
கொரோனா இரண்டாம் அலை பாதிப்புகளை தொடர்ந்து, நடப்பாண்டு மீண்டும் தொற்று பரவல் அதிகரித்து வருகிறது. திருப்பூர் மாவட்டத்திலும் கொரோனா தொற்று பரவல் மீண்டும் அதிகரித்து வருகிறது.
அவ்வகையில், பல்லடம் காவல் நிலையத்தில் பணிபுரியும் ஏட்டு, மற்றும் தலைமை காவலர்கள் என, ஆறு பேர், தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். 5 பேர் தங்களது சொந்த ஊருக்கு சென்றுள்ள நிலையில், தொற்று உறுதி ஆனதால், அங்கேயே தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். போதிய தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன' என, சுகாதாரத்துறையினர் கூறினர்.