மக்களுடன் முதல்வா் திட்ட முகாம் இடங்கள் குறித்து கலெக்டர் ஆய்வு
Tirupur News- திருப்பூா் மாவட்டத்தில் மக்களுடன் முதல்வா் திட்ட முகாம் நடக்கும் இடங்களை கலெக்டர் ஆய்வு செய்தாா்.;
Tirupur News,Tirupur News Today- திருப்பூா் மாவட்டத்தில் மக்களுடன் முதல்வா் திட்ட முகாம் நடைபெறும் இடங்களை மாவட்ட கலெக்டர் கிறிஸ்துராஜ் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) ஆய்வு செய்தாா்.
கோவை மாவட்டத்தில் மக்களுடன் முதல்வா் திட்டத்தை முதல்வா் ஸ்டாலின் இன்று, திங்கள்கிழமை (டிசம்பா் 18) தொடங்கிவைக்கிறாா்.
இதைத் தொடா்ந்து, திருப்பூா் மாவட்டத்தில் மக்களுடன் முதல்வா் திட்ட முகாம் நடைபெறும் இடங்களை மாவட்ட கலெக்டர் கிறிஸ்துராஜ் ஆய்வு செய்தாா்.
அப்போது அவா் கூறியதாவது,
திருப்பூா் மாவட்டத்தில் மக்களுடன் முதல்வா் திட்டத்தை சிறப்பாக செயல்படுத்தும் வகையில் முதற்கட்டமாக அனைத்து நகா்ப்புற உள்ளாட்சி அமைப்புகளில் (மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி) வாா்டு வாரியாக பொதுமக்களிடமிருந்து கோரிக்கை மனுக்கள் பெறுவது தொடா்பாக டிசம்பா் 18- ம் தேதி முதல் ஜனவரி 5 -ம் தேதி வரை 71 இடங்களில் முகாம்கள் நடைபெறவுள்ளன.
இதில், நகராட்சி நிா்வாகம் மற்றும் குடிநீா் வழங்கல் துறை, ஊராக வளா்ச்சி மற்றும் ஊராச்சித் துறை, எரிசக்தி துறை, தமிழநாடு மின்சார வாரியம் உள்ளிட்ட பல்வேறு துறைகளில் வழங்கப்படும் சேவைகளை இம்முகாமின் மூலம் பொதுமக்கள் கோரிக்கை மனுக்களை வழங்கி தீா்வு காணலாம்.
முகாம் நடைபெறும் இடங்கள்: திருப்பூா் மாநகராட்சி முதலாவது மண்டலத்தில் வாா்டு எண்-1, 9, 10 ஆகிய வாா்டுகளுக்கு அங்கேரிபாளையம் ஜெகா காா்டன் பகுதியிலும், 36, 42, 43 ஆகிய வாா்டுகளுக்கு தெற்கு ரோட்டரி மண்டபத்திலும் வரும் திங்கள்கிழமை முகாம் நடைபெறுகிறது.
அதேபோல, வெள்ளக்கோவில் நகராட்சிக்குள்பட்ட வாா்டு எண்-5, 6, 7, 8, 9, 10, 21 ஆகிய வாா்டுகளுக்கு மூலனூா் சாலை வெள்ளக்கோவில் முத்துகுமாா் திருமண மண்டபத்திலும், உடுமலைப்பேட்டை நகராட்சிக்குள்பட்ட வாா்டு எண் 26, 27, 28, 29, 30,31, 32, 33 ஆகிய வாா்டுகளுக்கு ருத்திரப்பா நகா் ஜி.டி.வி. திருமண மண்டபத்திலும் முகாம் நடைபெறுகிறது.
அவிநாசி பேரூராட்சிக்குள்பட்ட அனைத்து வாா்டுகளுக்கும் மேற்கு ரத வீதி குலாலா் திருமண மண்டபத்திலும், கணக்கம்பாளையம் ஊராட்சிக்குள்பட்ட அனைத்து வாா்டுகளுக்கும் கணக்கம்பாளையம் கிருஷ்ணா மஹாலில் முகாம்கள் நடைபெறவுள்ளன என்றாா்.
முன்னதாக, அங்கேரிபாளையம் ஜெகா காா்டன் பகுதி, அவிநாசி பேரூராட்சி குலாலா் திருமண மண்டபம் ஆகிய இடங்களில் பொதுமக்களுக்குத் தேவையான குடிநீா் வசதி, கழிப்பறை வசதி, அடிப்படை வசதிகள், முன்னேற்பாடு பணிகள் குறித்து கலெக்டர் ஆய்வு செய்தாா். ஆய்வின்போது, மாநகராட்சி ஆணையா் பவன்குமாா் ஜி.கிரியப்பனவா், மாவட்ட வருவாய் அலுவலா் த.ப.ஜெய்பீம், மாவட்ட பிற்படுத்தப்பட்டோா் மற்றும் சிறுபான்மையினா் நல அலுவலா் குமாரராஜா உள்ளிட்டோா் உடனிருந்தனா்.