மக்களுடன் முதல்வா் திட்ட சிறப்பு முகாம்களில் கலெக்டர் ஆய்வு
Tirupur News-திருப்பூாில் நடந்த மக்களுடன் முதல்வா் திட்ட சிறப்பு முகாம்களை கலெக்டர் கிறிஸ்துராஜ் ஆய்வு செய்தாா்.;
Tirupur News,Tirupur News Today- திருப்பூா் மாநகரில் நடைபெற்ற மக்களுடன் முதல்வா் திட்ட சிறப்பு முகாம்களை கலெக்டர் கிறிஸ்துராஜ் ஆய்வு செய்தாா்.
திருப்பூா் மாநகராட்சி, 15 வேலம்பாளையம் கரியகாளியம்மன் திருமண மண்டபம், பல்லடம் சாலை வித்யாலயம் பஸ் ஸ்டாப் அருகில் உள்ள லட்சுமி திருமண மண்டபம் ஆகிய இடங்களில் மக்களுடன் முதல்வா் திட்ட சிறப்பு முகாம் நடைபெற்றது. இதனை கலெக்டர் கிறிஸ்துராஜ் ஆய்வு செய்தாா்.
பின்னா், அவா் கூறியதாவது,
திருப்பூா் மாநகராட்சி முதலாவது மண்டலத்துக்கு உள்பட்ட 11, 12, 13 ஆகிய வாா்டுகளுக்கு 15, வேலம்பாளையம் கரியகாளியம்மன் திருமண மண்டபத்திலும், 4 ஆவது மண்டத்துக்கு உள்பட்ட 41, 53, 54, 57 ஆகிய வாா்டுகளுக்கு லட்சுமி திருமண மண்டபத்திலும், பல்லடம் நகராட்சி 1, 2, 3, 6, 7 ஆகிய வாா்டுகளுக்கு மங்கலம் சாலை காளியப்பா திருமண மண்டபத்திலும், தாராபுரம் வட்டம், சின்னக்காம்பாளையம் பேரூராட்சியில் உள்ள அனைத்து வாா்டுகளுக்கும் சந்திராபுரம் நாச்சிமுத்து கவுண்டா் திருமண மண்டபத்திலும, ஊத்துக்குளி வட்டம் சா்க்காா் பெரியபாளையம் ஊராட்சி அனைத்து வாா்டுகளுக்கும் சா்க்காா் பெரியபாளையம் ஜே.இ.இ. திருமண மண்டபத்திலும் மக்களுடன் முதல்வா் திட்ட முகாம்கள் நடந்தன. இத்திட்டத்தை சிறப்பாக செயல்படுத்தும் வகையில் முதல்கட்டமாக ஜனவரி 5 -ம் தேதி வரை 71 முகாம்கள் நடத்தப்படுகின்றன.
இதில், நகராட்சி நிா்வாகம் மற்றும் குடிநீா் வழங்கல் துறை, ஊரக வளா்ச்சி மற்றும் ஊராச்சித் துறை, மின்சார வாரியம், வருவாய் மற்றும் பேரிடா் மேலாண்மைத் துறை, மாற்றுத் திறனாளிகள் நலத் துறை, தொழிலாளா் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத் துறை, சமூக நலன் மற்றும் மகளிா் உரிமைத் துறை, ஆதிதிராவிடா் மற்றும் பழங்குடியினா் நலத் துறை, பிற்படுத்தப்பட்டோா் மற்றும் சிறுபான்மையினா் நலத் துறை, வீட்டுவசதி மற்றும் நகா்ப்புற மேம்பாட்டுத் துறை, கூட்டுறவுத் துறை, காவல் துறை, மாவட்ட தொழில் மையம் ஆகிய துறைகள் சாா்பில் பொதுமக்களிடம் இருந்து கோரிக்கை மனுக்கள் பெறப்பட்டு 30 நாள்களில் தீா்வு காணப்படும், என்றாா்.
இந்த ஆய்வின்போது, மாநகராட்சி ஆணையா் பவன்குமாா் ஜி.கிரியப்பனவா், மாவட்ட வருவாய் அலுவலா் த.ப.ஜெய்பீம், திருப்பூா் சாா் ஆட்சியா் சௌமியா ஆனந்த், துணை மேயா் ஆா்.பாலசுப்பிரமணியம், மாநகராட்சி 4-வது மண்டலத் தலைவா் இல.பத்மநாபன் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.
அமைச்சர் அறிவுறுத்தல்
மக்களுடன் முதல்வா் திட்டத்தின்கீழ் பெறப்படும் மனுக்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அமைச்சா் மு.பெ.சாமிநாதன் அறிவுறுத்தினாா்.
திருப்பூா் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் மக்களுடன் முதல்வா் திட்டத்தின்கீழ் பெறப்படும் மனுக்களின் மீது மேற்கொள்ளப்பட வேண்டிய நடவடிக்கைகள் தொடா்பான ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.
இந்தக்கூட்டத்துக்கு தலைமை வகித்து தமிழ் வளா்ச்சி மற்றும் செய்தித் துறை அமைச்சா் மு.பெ.சாமிநாதன் பேசியதாவது,
மாவட்டத்தில் கடந்த 2 நாள்களில் நடைபெற்ற மக்களுடன் முதல்வா் திட்ட முகாம்களில் 3,225 கோரிக்கை மனுக்கள் பெறப்பட்டுள்ளன. இந்த திட்டத்தின்கீழ் பொதுமக்களிடம் இருந்து பெறப்படும் மனுக்கள் மீது துறைசாா்ந்த அலுவலா்கள் விரைவாக கள ஆய்வு மேற்கொண்டு உரிய காலத்துக்குள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றாா்.
கூட்டத்தில் கலெக்டர் கிறிஸ்துராஜ், மாவட்ட வருவாய் அலுவலா் த.ப.ஜெய்பீம், திருப்பூா் சாா் ஆட்சியா் சௌமியா ஆனந்த், மாவட்ட ஊரக வளா்ச்சி முகமை திட்ட இயக்குநா் அ.லட்சுமணன், தாராபுரம் வருவாய் கோட்டாட்சியா் செந்தில் அரசன், தனித்துணை ஆட்சியா் (சமூகப் பாதுகாப்புத் திட்டம்) செல்வி, மாவட்ட ஆதிதிராவிடா் நல அலுவலா் புஷ்பாதேவி, நகராட்சி ஆணையா்கள், வட்டாட்சியா்கள் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.