திருப்பூரில் வாக்குச்சாவடி மையங்களில் கலெக்டர் ஆய்வு

Tirupur News-கலெக்டர் கிறிஸ்துராஜ் வாக்குச்சாவடி மையங்களில் ஆய்வு மேற்கொண்டு தேவையான ஆலோசனைகளை வழங்கினார்.;

Update: 2023-11-27 10:16 GMT

Tirupur News- கலெக்டர் கிறிஸ்துராஜ் வாக்குச்சாவடி மையங்களில் ஆய்வு நடத்தினார்.

Tirupur News,Tirupur News Today- திருப்பூர் மாவட்ட கலெக்டர் கிறிஸ்துராஜ் வாக்குச்சாவடி மையங்களில் நடைபெற்ற பெயர் சேர்த்தல், நீக்கல் சிறப்பு முகாமை பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

அப்போது அவர் கூறியதாவது,

ஜனவரி 1-ந்தேதியன்று 18 வயது பூர்த்தியடையும் வாக்காளர்களும் மற்றும் அடுத்த ஆண்டு அதாவது 2024-ம் ஆண்டின் ஏப்ரல் மாதம் 1-ந்தேதி, ஜூலை 1-ந்தேதி அக்டோபர் 1-ந்தேதி 18 வயது பூர்த்தியடையும் வாக்காளர்களும் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்ப்பதற்கான படிவம் 6-ஐ பூர்த்தி செய்து முன்னதாகவே அளிக்கலாம்.

வாக்காளர் பட்டியலில் உள்ள பதிவுகளில் திருத்தம் செய்ய விரும்புகிறவர்கள், பெயர் நீக்கம் செய்ய விரும்புகிறவர்கள் மற்றும் ஒரே தொகுதிக்குள் குடியிருப்பு மாற்றியவர்கள், முகவரி அல்லது புகைப்படம் மாற்றம் செய்வது போன்ற கோரிக்கைகள் தொடர்பான படிவங்களில் உரிய ஆவணங்களை இணைத்து வாக்குச்சாவடி மையங்களில் விண்ணப்பிக்கலாம்.

வாக்காளர் பட்டியலில் புதிதாக பெயர் சேர்க்க படிவம்-6, வெளிநாடுவாழ் வாக்காளரின் பெயரை வாக்காளர் பட்டியலில் சேர்க்க படிவம் -6ஏ, தன் விருப்பத்தின் அடிப்படையில் வாக்காளர் அடையாள அட்டையுடன் ஆதார் எண்ணை இணைக்க படிவம்-6 பி, வாக்காளர் பட்டியலில் பெயர் நீக்கம் செய்ய படிவம்-7, ஒரே சட்டமன்ற தொகுதிக்குள் முகவரி திருத்தம் செய்யவும், ஒரே சட்டமன்ற தொகுதியில் இருந்து மற்றொரு சட்டமன்ற தொகுதிக்கு முகவரி மாற்றம் செய்ய மற்றும் வாக்காளர் பட்டியலில் உள்ள விவரங்கள் மற்றும் புகைப்படம் திருத்தம் செய்ய படிவம்-8 ஆகியவற்றை பூர்த்தி செய்து விண்ணப்பிக்கலாம். பொதுமக்கள் https://voters.eci.gov.in என்ற இணையதளம் மூலமாகவும், Voter Helpline App என்ற மொபைல் செயலி மூலமாகவும் விண்ணப்பிக்கலாம்.

இவ்வாறு அவர் கூறினார்.

Tags:    

Similar News