திருப்பூரில் கோ- ஆப்டெக்ஸ் சிறப்பு தள்ளுபடி விற்பனை துவக்கம்; ரூ. 2 கோடிக்கு விற்க இலக்கு

Tirupur News- திருப்பூர் கோ-ஆப்டெக்ஸ் விற்பனை நிலையத்தில் தீபாவளி-2023ஐ முன்னிட்டு சிறப்பு கோ-ஆப் டெக்ஸ் தள்ளுபடி விற்பனையை கலெக்டர் கிறிஸ்துராஜ் தொடங்கி வைத்தார்.;

Update: 2023-09-24 13:01 GMT

Tirupur News- திருப்பூர் கோ-ஆப்டெக்ஸ் விற்பனை நிலையத்தில், தீபாவளி சிறப்பு கோ-ஆப் டெக்ஸ் தள்ளுபடி விற்பனையை கலெக்டர் கிறிஸ்துராஜ் பார்வையிட்டார்.

Tirupur News,Tirupur News Today- தமிழக அரசின் கூட்டுறவு நிறுவனமான கோ-ஆப்டெக்ஸ் கடந்த 89 வருடங்களாக தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் தமிழக நெசவாளர்களால் உற்பத்தி செய்யப்படும் ரகங்களை கொள்முதல் செய்து இந்தியா முழுவதும் உள்ள கோ-ஆப்டெக்ஸ் விற்பனை நிலையங்கள் மூலம் சந்தைப்படுத்தி நெசவாளர்களுக்கு தொடர் வேலைவாய்ப்பு கொடுத்து, அவர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தி வருகிறது.

இந்த நிறுவனம் பாரம்பரியமிக்க பட்டு ரகங்களான காஞ்சிபுரம், ஆரணி, சேலம், கோவை மென்பட்டு, திருபுவனம், ராசிபுரம் முதலிய பகுதிகளில் உற்பத்தி செய்யப்படும் பட்டு சேலைகளை வாடிக்கையாளர்கள் விரும்பும் வகையில் காலத்திற்கேற்ப புதிய வடிவமைப்புகளில் உற்பத்தி செய்து விற்பனை செய்து வருகிறது.

வரும் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு சிறப்பு விற்பனைக்காக கைத்தறி ரகங்களுக்கு 30 சதவீதம் அரசு சிறப்பு தள்ளுபடி வழங்குகிறது. தீபாவளி பண்டிகையை முன்னிட்டு புதிய வடிவமைப்புகளில் உற்பத்தி செய்யப்பட்ட பட்டு மற்றும் பருத்தி சேலைகள், இயற்கை சாயமிட்ட ஆர்கானிக் சேலைகள், போர்வைகள், படுக்கை விரிப்புகள், தலையணை உறைகள், வேட்டிகள், லுங்கிகள், துண்டு ரகங்கள், திரைச்சீலைகள், ரெடிமேட் சட்டைகள், சுடிதார் ரகங்கள், குர்தீஸ் வகைகள் பலதரப்பட்ட நவீன பைகள், குல்ட் ரகங்கள் மற்றும் ஏற்றுமதி தரம் வாய்ந்த ஹோம் பர்னிசிங் ரகங்கள் என ஏராளமாக தருவிக்கப்பட்டுள்ளன.

மேலும் அரசு பணியாளர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு வட்டியில்லாத சுலப தவணையின் மூலம் கடன் விற்பனை உண்டு. மேலும் கோ-ஆப்டெக்ஸ் மாதாந்திர சேமிப்பு திட்டத்தின் மூலம் அதிக வாடிக்கையாளர் பயன்பெறும் வகையில் ரூ.300 முதல் ரூ.3000 வரை மாதாந்திர சேமிப்பு திட்டத்தில் இணையும் வசதியும் உள்ளது.

இதுகுறித்து கலெக்டர் கிறிஸ்துராஜ் கூறுகையில், திருப்பூர் மாவட்டத்தில் உள்ள கோ-ஆப்டெக்ஸ் புதிய விற்பனை நிலையம் மற்றும் உடுமலைபேட்டையில் உள்ள கோ-ஆப்டெக்ஸ் விற்பனை நிலையங்கள் மூலம் சுமார் ரூ.2 கோடி விற்பனை இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது, என்றார்.

இந்நிகழ்ச்சியில், உதவி இயக்குநர் (கைத்தறித்துறை) கார்த்திகேயன்,முதுநிலை மண்டல மேலாளர் நந்தகோபால், மேலாளர் (அரசு திட்டம்) அன்பழகன், மேலாளர் (உற்பத்தி) கஜேந்திரன், கைத்தறி இயக்குனர் கார்த்திகேயன் மற்றும் கோ-ஆப்டெக்ஸ் புதிய விற்பனை நிலையம் மேலாளர் பிரபு, கோ-ஆப்டெக்சின் வாடிக்கையாளர்கள் மற்றும் சார்ந்த அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர். 

Tags:    

Similar News