திருப்பூரில் சினிமா தியேட்டருக்கு ரூ. 10 ஆயிரம் அபராதம்

Cinema Movie Theater - 'ஆன்லைன்' டிக்கெட் புக்கிங் செய்து, சினிமா பார்க்க சென்றவரை அனுமதிக்காத தியேட்டர் நிர்வாகத்துக்கு, திருப்பூர் நுகர்வோர் கோர்ட் ரூ. 10 ஆயிரம் அபராதம் விதித்தது.

Update: 2022-09-10 11:06 GMT

ஸ்ரீ சக்தி சினிமாஸ் தியேட்டர்

Cinema Movie Theater -திருப்பூர், தாராபுரம் ரோடு பகுதியைச் சேர்ந்தவர் செல்வநாயகம். இவர், கடந்த 2019 நவம்பரில்  திருப்பூர் 'ஸ்ரீசக்தி சினிமாஸ்' தியேட்டரில் 'பிகில்' படம் பார்க்க, மூன்று டிக்கெட் 'ஆன்லைன்' மூலம் 'புக்கிங்' செய்தார்.அன்று மாலை காட்சிக்கு, அவர் தன் குடும்பத்துடன் சென்றார். அவரது டிக்கெட்டை வாங்கிப் பார்த்து உறுதி செய்த ஊழியர், செல்வநாயகம் மது அருந்தியிருப்பதால் அனுமதிக்க முடியாது எனக் கூறியுள்ளார். அந்த சமயத்தில் அவர் மது அருந்தவில்லை என்று வாதாடியும், தியேட்டருக்குள் அனுமதிக்க மறுத்ததோடு, டிக்கெட் கட்டணத்தை திரும்ப தர மறுத்து திருப்பி அனுப்பினர்.

இதுகுறித்து செல்வநாயகம் திருப்பூர் நுகர்வோர் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார்.வழக்கை விசாரித்த, நுகர்வோர் கோர்ட் நீதிபதி தீபா, உறுப்பினர்கள் பாஸ்கர், ராஜேந்திரன் ஆகியோர், 'டிக்கெட் கட்டணம் 289 ரூபாய்; அனுமதிக்க மறுத்து திருப்பி அனுப்பியதால் ஏற்பட்ட மன உளைச்சலுக்கு 5,000 மற்றும் வழக்கு செலவுக்கு 5,000 ரூபாயை தியேட்டர் நிர்வாகம் வழங்க வேண்டும்' என உத்தரவிட்டனர்.



அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2

Tags:    

Similar News