திருப்பூர் புறநகரில் பட்டாசு வெடித்த 60 பேர் மீது வழக்குப்பதிவு

Tirupur News- திருப்பூர் புறநகர் பகுதிகளில் அனுமதியற்ற நேரத்தில் பட்டாசு வெடித்த 60 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.;

Update: 2023-11-14 15:58 GMT

Tirupur News- அனுமதியற்ற நேரத்தில் பட்டாசு வெடித்த 60 பேர் மீது வழக்குப்பதிவு (கோப்பு படம்)

Tirupur News,Tirupur News Today- தீபாவளி பண்டிகையன்று பட்டாசு வெடிக்க நேரக்கட்டுப்பாடு விதிக்கப்பட்டு அரசு அறிவித்தது. அதன்படி காலை 6 மணி முதல் 7 மணி வரையும், இரவு 7 மணி முதல் 8 மணி வரையும் 2 மணி நேரம் மட்டுமே பட்டாசு வெடிக்க நேரம் அறிவிக்கப்பட்டது.

அனுமதிக்கப்பட்ட நேரத்தையும் தாண்டி பட்டாசு வெடித்தாலோ, அதிக சத்தத்துடன் ஆபத்தை ஏற்படுத்தும் வகையில் பட்டாசு வெடித்தாலோ போலீசார் வழக்குப்பதிவு செய்து நடவடிக்கை மேற்கொண்டனர்.

அதன்படி திருப்பூர் மாநகர் பகுதியில் பட்டாசு வெடித்தது தொடர்பாக வழக்குப்பதிவு ஏதும் செய்யப்படவில்லை. திருப்பூர் மாவட்ட போலீஸ் எஸ்பி கட்டுப்பாட்டுக்கு உட்பட்ட புறநகர பகுதியில் தீபாவளியன்று அனுமதியற்ற நேரத்தில் பட்டாசு வெடித்தது தொடர்பாக 60 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

திருப்பூரில் இருந்து 1.30 லட்சம் பேர் வெளியூர்களுக்கு பயணம்

தீபாவளி பண்டிகையை கொண்டாட திருப்பூரில் இருந்து தொழிலாளர்கள் சொந்த ஊர் நோக்கி சென்றனர். குறிப்பாக சிறப்பு அரசு பஸ்கள் இயக்கப்பட்டன. பஸ்கள் மூலமாக தொழிலாளர்கள் புறப்பட்டனர். கடந்த 9-ம் தேதி முதல் கோவில்வழி, மத்திய பஸ் நிலையம், புதிய பஸ் நிலையம் பகுதிகளில் இருந்து 350 சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டன.

தீபாவளிக்கு முந்தைய நாளான கடந்த 11-ம் தேதி இரவு கோவில்வழி பஸ் நிலையத்தில் கூட்டம் அலைமோதியது. 40 ஆயிரம் பேர் சொந்த ஊருக்கு புறப்பட்டனர். புதிய பஸ் நிலையத்தில் இருந்து 30 ஆயிரம் பேர், மத்திய பஸ் நிலையத்தில் இருந்து 10 ஆயிரம் பேர் என 80 ஆயிரம் பேர் புறப்பட்டனர். கடந்த 9,10,11-ம் தேதிகளில் மொத்தம் 1 லட்சத்து 30 ஆயிரம் பேர் திருப்பூரில் இருந்து சொந்த ஊருக்கு பயணம் செய்துள்ளதாக அரசு போக்குவரத்துத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

வெளியூர் சென்றவர்கள் நேற்று முதல் திருப்பூர் திரும்ப தொடங்கியுள்ளனர். இதற்காக சிறப்பு பஸ்கள் இயக்கம் தொடங்கியது. நாளை (புதன்கிழமை) வரை பஸ்கள் இயக்கப்பட உள்ளது. கூட்டம் இருந்தால் 18, 19-ம் தேதிகளில் பஸ்களை இயக்கவும் தயாராக உள்ளனர்.

Tags:    

Similar News