சுற்றுலா தொழில் முனைவோர் விருது பெற அழைப்பு
Entrepreneur Awards - தமிழக அரசின் விருது பெற, சுற்றுலா தொழில்முனைவோர், வரும் 26ம் தேதிக்குள் விண்ணப்பிக்க, திருப்பூர் மாவட்ட நிர்வாகம் அழைப்பு விடுத்துள்ளது.;
Entrepreneur Awards -உலக சுற்றுலா தின கொண்டாட்டத்தின் ஒருபகுதியாக, தமிழக சுற்றுலா துறை சார்பில், ஆண்டு தோறும் சுற்றுலா தொழில்முனைவோருக்கு விருது வழங்கப்பட உள்ளது. பல்வேறு சுற்றுலா ஆபரேட்டர்கள், விமான நிறுவனங்கள், ஓட்டல், உணவகங்கள், சுற்றுலா வழிகாட்டிகள், மாநில சுற்றுலாவை மேம்படுத்துவதில் பங்களிக்கும் நிறுவனங்களுக்கு இந்த விருது வழங்கப்படுகிறது. முதன்முறையாக, 15 வெவ்வேறு பிரிவுகளில், உலக சுற்றுலா தினமான வரும் செப்., 27 ம் தேதி விருது வழங்கப்பட உள்ளது.
திருப்பூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து சுற்றுலா தொழில்முனைவோரும், இந்த விருதுக்கு விண்ணப்பிக்க மாவட்ட நிர்வாகம் அழைப்பு விடுத்துள்ளது.www.tnturismawards.com என்கிற இணையதளத்தில் விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து, பூர்த்தி செய்யவேண்டும். பூர்த்தி செய்த விண்ணப்பங்களை, வரும் 26ம் தேதிக்குள் சமர்ப்பிக்க வேண்டும், என மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது.
அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2