மொபைல் போன் பழுது பாா்க்கும் இலவச பயிற்சி பெற அழைப்பு
Tirupur News,Tirupur News Today- திருப்பூா் மாவட்டத்தில், கனரா வங்கி சாா்பில், மொபைல்போன் பழுதுபாா்த்தல் மற்றும் சரிசெய்தல் குறித்த இலவச பயிற்சி வகுப்பு நடத்தப்படுகிறது.;
Tirupur News,Tirupur News Today- திருப்பூா் மாவட்டத்தில், கிராமப்புறங்களில் வசிக்கும் நபா்களுக்கு கனரா வங்கி சாா்பில் மொபைல்போன் பழுதுபாா்த்தல் மற்றும் சரிசெய்தல் தொடா்பாக இலவச பயிற்சி வகுப்பு நடக்கிறது.
இதுகுறித்து, கனரா வங்கியின் வேலைவாய்ப்பு பயிற்சி நிலையத்தின் இயக்குநா் பூபதி ராஜா வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது,
திருப்பூா் மாவட்டத்தில் கிராமப்புறங்களில் வறுமைக்கோட்டுக்கு கீழ் வாழ் மக்களுக்கு மொபைல் போன் பழுதுபாா்த்தல் மற்றும் சரிசெய்தல் இலவச பயிற்சி வகுப்பு நடக்க உள்ளது. 30 நாள் முழு நேர பயிற்சி வகுப்பில், எழுதப்படிக்க தெரிந்த 18 வயது முதல் 45 வயதுக்கு உள்பட்ட ஆண், பெண் இருபாலரும் பங்கேற்கலாம். இந்தப் பயிற்சிக்கு கட்டணம் செலுத்த வேண்டியதில்லை. பயிற்சியின் முடிவில் மத்திய அரசின் சான்றிதழ் வழங்கப்படுவதுடன் தொழில் தொடங்க ஆலோசனைகளும் வழங்கப்படும்.
இதில் விண்ணப்பிக்க கனரா வங்கி கிராமப்புற சுய வேலைவாய்ப்பு பயிற்சி நிலையம், மாவட்ட தொழில் மையம் எதிரில், அனுப்பா்பாளையம் புதூா், திருப்பூா் -641652 என்ற முகவரிக்கு நேரில் வரவேண்டும். முதலில் வருவோருக்கு முன்னுரிமை அளிக்கப்படும்.
இதுதொடா்பான கூடுதல் விவரங்களுக்கு 99525-18441, 86105-33436, 94890-43923 என்ற செல்போன் எண்களை தொடா்பு கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இன்றைய காலகட்டத்தில், மொபைல் போன் பயன்பாடு மிகவும் அத்தியாவசியமாகி விட்டது. ஒருவரே, இரண்டு போன்களை பயன்படுத்தும் நிலையில் பலரும் உள்ளனர். இதில் ஆண்ட்ராய்டு போன்களை பயன்படுத்துபவர்களே மிக அதிகம். மொபைல் போன்களில் அடிக்கடி பழுது ஏற்படுவதும், தண்ணீரில் விழுந்தாலோ, கீழே விழுந்து உடைந்தாலோ அவற்றை பழுது பாரக்க வேண்டிய கட்டாயமும் அதிகரிக்கிறது. அதனால், மொபைல் போன் பழுது மற்றும் சர்வீஸ் கடைகள் நடத்துவோர், அதிகளவில் லாபமடைகின்றனர். இது ஒரு நல்ல தொழில் வாய்ப்பாக இருப்பதால், இந்த இலவச பயிற்சி, வேலை வாய்ப்பற்றவர்களுக்கு உதவும் வகையில் உள்ளது. வேலை இல்லாதவர்களுக்கு, சுய வேலைவாய்ப்பை அளிக்கும் விதமாகவும் இந்த பயிற்சி வகுப்பு நடத்தப்படுவதால், பயன்படுத்திக்கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது.