திருப்பூரில் நாட்டுக்கோழி வளர்ப்பு 3 நாள் பயிற்சி பெற அழைப்பு

Tirupur News,Tirupur News Today- திருப்பூரில் நாட்டுக்கோழி வளர்ப்பு பயிற்சி வரும் 11-ம் தேதி தொடங்கி, 13ம் தேதி வரை, 3 நாட்களுக்கு நடக்கிறது;

Update: 2023-07-05 02:08 GMT

Tirupur News,Tirupur News Today- திருப்பூரில் மூன்று நாட்களுக்கு நாட்டுக்கோழி வளர்ப்பு குறித்த பயிற்சி அளிக்கப்படுகிறது. (கோப்பு படம்)

Tirupur News,Tirupur News Today- திருப்பூரில் நாட்டுக்கோழிகளின் முட்டை மற்றும் இறைச்சி உற்பத்தியைப் பெருக்கும் வளா்ப்பு முறைகள் குறித்த பயிற்சி வரும் (ஜூலை) 11 முதல் 13-ம் தேதி வரையில் நடக்கிறது.

நாட்டுக்கோழி வளர்ப்பு, கிராமப்புற மக்களால் தொன்றுதொட்டு மேற்கொள்ளப்பட்டுவரும் ஒரு சிறந்த தொழிலாகும். நாட்டுக்கோழி வளர்ப்பு முறை ஒரு பொழுது போக்காக மட்டுமின்றி, கிராமப்புற மக்களின் அவசர பணத்தேவையை பூர்த்தி செய்யவும், நிரந்தர வருமானம் தரும் தொழிலாகவும் உள்ளது.

நாட்டுக்கோழிகளை பெண்கள் மற்றும் வயது முதிர்ந்தோர் அனைவரும் எந்த சிரமமும் இன்றி வளர்க்கலாம். பெரும்பாலும் விட்டில் உள்ள அரிசிகுருணை, எஞ்சியுள்ள தீவனப்பொருட்கள், வயல் வெளிகளில் உள்ள புழு பூச்சிகள் போன்றவற்றை உண்ணும் நிலையில், நாட்டுக்கோழிகள் வளர்க்கப்படுகின்றன.

புறக்கடையில் வளர்க்கப்படும் கோழிகள் எந்தவித நவீன தொழில் நுட்பங்களையும் பின்பற்றாமல் வளர்க்கப்படுகிறது. அதனால் தேவையான சத்துக்கள் சரியான அளவில் கிடைக்காததால் உற்பத்தி திறன் குறைந்து காணப்படுகிறது. எனவே சரியான முறையில் சரிவிகித தீவனம் கொடுத்து நோய் தடுப்பு முறைகளையும் பின்பற்றி வளர்தோமானால் நாட்டுக் கோழி வளர்ப்பு அதிக இலாபமான தொழிலாக வளர்சியடயும்.

வீட்டில் எளிதாக கிடைக்கும் தானியங்களை கொண்டும் தோட்டங்களில் பச்சை புற்களை மேயிந்தும் வளரக்கூடியது. சந்தையில் எப்போதும் நல்ல விற்பனை வாய்ப்புடன் அதிக விலையுள்ள இறைச்சி அதிகமாக தேவைப்படும் ருசியான முட்டைகள் குறைவான செலவில் அதிக லாபம் தரும் தொழில். அவசர பணத்தேவையை பூர்த்தி செய்யும் தொழில். அதிக நோய் எதிர்ப்பு சக்தி கொண்டது. சுய வேலைவாய்ப்புக்கு ஏற்ற தொழில். கிராமப்புற பெண்களுக்கேற்ற நல்ல பகுதி நேர வேலை வாய்ப்பு. நாட்டுக் கோழிகளின் அடை காக்கும் தன்மை. குஞ்சுகளை பாதுகாத்து வளர்க்கும் தன்மை சிறந்த உர மதிப்பு எச்சம் என, பல பயன்கைள கொண்டது. 

இதுகுறித்து திருப்பூா் கால்நடை மருத்துவப் பல்கலைக்கழக பயிற்சி மற்றும் ஆராய்ச்சி மையத்தின் தலைவா் மதிவாணன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு

திருப்பூா் கால்நடை மருத்துவப் பல்கலைக்கழக பயிற்சி மற்றும் ஆராய்ச்சி மையத்தில் நபாா்டு வங்கி நிதியுதவியுடன் நாட்டுக் கோழிகளின் முட்டை மற்றும் இறைச்சி உற்பத்தியை பெருக்கும் வளா்ப்பு முறைகள் எனும் தலைப்பில் ஜூலை 11 முதல் 13-ம் தேதி வரையில் பயிற்சி அளிக்கப்படுகிறது. இப்பயிற்சியில் நாட்டுக் கோழிகளின் வகைகள், வளா்ப்பு முறைகள், நாட்டுக் கோழிகளை பாதிக்கும் நோய்கள், தீவன மேலாண்மை மற்றும் நோய்த் தடுப்பு யுக்திகள் போன்ற தலைப்புகளில் விளக்கங்களும், பண்ணை மேலாண்மைக்கும் கோழிகளின் உற்பத்தி திறனுக்குமான தொடா்பு மற்றும் இதர செயல்முறை விளக்கங்களும் அளிக்கப்பட உள்ளன.

இப்பயிற்சியின் இறுதி நாளில் அருகே உள்ள பண்ணைகளுக்கு அழைத்து சென்று, நேரடி செயல்முறை விளக்கங்களும் அளிக்கப்பட உள்ளன. முதலில் வரும் 25 நபா்களுக்கு மட்டுமே முன்னுரிமை என்ற அடிப்படையில் தொடங்கப்படும். இப்பயிற்சி வகுப்புக்கு நபா் ஒருவருக்கு ரூ.200 கட்டணம் வசூலிக்கப்படும். இப்பயிற்சி தொடா்பான முன்பதிவுக்கு 0421-2248524 என்ற எண்ணைத்தொடா்பு கொள்ளலாம் என்று, தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags:    

Similar News