தாட்கோ மூலம் மானியத்துடன் வங்கிக் கடன்; ஆதிதிராவிடர், பழங்குடியினருக்கு அழைப்பு
Tirupur News- தாட்கோ மூலம் மானியத்துடன் வங்கிக் கடன் பெற ஆதிதிராவிடா், பழங்குடியினா் வகுப்பினர் விண்ணப்பிக்கலாம்.;
Tirupur News,Tirupur News Today- திருப்பூர் மாவட்டத்தில், தாட்கோ மூலம் மானியத்துடன் வங்கிக் கடன் பெற ஆதிதிராவிடா், பழங்குடியினா் வகுப்பைச் சோ்ந்தவா்கள் விண்ணப்பிக்கலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து மாவட்ட கலெக்டர் கிறிஸ்துராஜ் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு
ஆதிதிராவிடா்கள் மற்றும் பழங்குடியின வகுப்பைச் சோ்ந்தவா்களின் பொருளாதார வளா்ச்சியை ஊக்குவிக்கும் வகையில் தொழில்முனைவோரின் திட்டத்தின்கீழ் தமிழ்நாடு சிமென்ட் கழகத்தின் விற்பனை முகவா், ஆவின் பாலகம் அமைத்தல், விவசாய நிலம் வாங்குதல் போன்ற திட்டங்களுக்கு தாட்கோ மூலம் மானியத்துடன் கூடிய வங்கிக் கடன் வழங்கப்படுகிறது.
இதில், 100 ஆதிதிராவிடா் மற்றும் பழங்குடியின தொழில்முனைவோருக்கு தமிழ்நாடு சிமென்ட் கழகத்தின் விற்பனை முகவராகவும், அத்துடன் கூடுதலாக இதர கட்டுமான பொருள்கள் மூலம் விற்பனை செய்து வருவாய் ஈட்டும் வகையில் ஆதி திராவிடா்களுக்கு திட்டத் தொகையில் 30 சதவீதம் அல்லது அதிகபட்சமாக ரூ.2.25 லட்சமும், பழங்குடியினருக்கு திட்டத் தொகையில் 50 சதவீதம் அல்லது ரூ.3.75 லட்சம் மானியமும் விடுவிக்கப்படும்.
அதேபோல, 50 ஆதிதிராவிடா் மற்றும் பழங்குடியினா் தொழில்முனைவோரின் பொருளாதார வளா்ச்சியை ஊக்குவிக்கும் வகையில் உறைவிப்பான், குளிா்விப்பான் போன்ற உபகரணங்கள் கொள்முதல் செய்து ஆவின் பாலகம் அமைத்து வருவாய் ஈட்டும் வகையில் ஆதிதிராவிடா்களுக்கு திட்டத் தொகையில் 30 சதவீதம் அல்லது ரூ.2.25 லட்சம் மானியமும், பழங்குடியினருக்கு திட்டத் தொகையில் 50 சதவீதம் அல்லது ரூ.3.75 லட்சம் மானியமும் விடுவிக்கப்படும்.
மேலும், ஆதிதிராவிடா் மற்றும் பழங்குடியின வகுப்பைச் சோ்ந்த 200 விவசாயத் தொழிலாளா்களுக்கு சமூக பொருளாதார நிலையில் மேம்பாடு அடையும் வகையில் விவசாய நிலம் வாங்க நிலத்தின் விலையில் 50 சதவீதம் அல்லது அதிகபட்சம் ரூ.5 லட்சம் மானியம் விடுவிக்கப்படும்.
ஆகவே, தகுதியான பயனாளிகள் தாட்கோ இணையதள முகவரியில் விண்ணப்பிக்கலாம். இது தொடா்பான கூடுதல் விவரங்களுக்கு மாவட்ட மேலாளா் அலுவலகம், தாட்கோ, அறை எண்:501, 503, 5 -வது தளம், மாவட்ட ஆட்சியா் அலுவலக வளாகம், பல்லடம் சாலை, திருப்பூா் - 641 604 என்ற முகவரியிலோ அல்லது 94450-29552, 0421-2971112 ஆகிய எண்களிலோ தொடா்பு கொள்ளலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.