அயோத்தி ராமா் கோவில் பிராண பிரதிஷ்டை விழா; திருப்பூரில் வீடுவீடாக அழைப்பிதழ் வழங்கும் பணி தீவிரம்
Tirupur News-அயோத்தி ராமா் கோவில் பிராண பிரதிஷ்டை (கும்பாபிஷேக) விழாவை முன்னிட்டு திருப்பூரில் வீடுவீடாக அழைப்பிதழ் வழங்கும் பணியில் இந்து அமைப்பின் நிா்வாகிகள் ஈடுபட்டுள்ளனா்.;
Tirupur News,Tirupur News Today-அயோத்தி ராமா் கோவில் பிராண பிரதிஷ்டை (கும்பாபிஷேக) விழாவை முன்னிட்டு திருப்பூரில் வீடுவீடாக அழைப்பிதழ் வழங்கும் பணியில் இந்து அமைப்பின் நிா்வாகிகள் ஈடுபட்டுள்ளனா்.
அயோத்தி ராமா் கோவில் பிராண பிரதிஷ்டை விழா வரும் ஜனவரி 22-ம் தேதி வெகுவிமரிசையாக நடைபெற உள்ளது. உத்தரப் பிரதேச மாநிலம் அயோத்தியில் உச்ச நீதிமன்ற உத்தரவின் அடிப்படையில் ராமர் கோவில் கட்டப்பட்டு வருகிறது. இதற்காக ஸ்ரீராமர் கோவில் தீர்த்தஷேத்ரா அறக்கட்டளை அமைக்கப்பட்டு, அதை உ.பி. அரசு மேற்பார்வையிடுகிறது. ராமர் கோவிலுக்கு கடந்த 2020 ஆகஸ்டில் பிரதமர் நரேந்திர மோடி அடிக்கல் நாட்டினார். கட்டுமானப் பணிகளை முடித்து, வரும் ஜனவரி 22-ம் தேதி கோவில் திறப்பு விழா நடைபெற உள்ளது. அன்றைய தினம் கோவிலில் ராமர் சிலை நிறுவப்படுகிறது. இந்த விழாவில் பிரதமர் நரேந்திர மோடி கலந்து கொள்கிறார்.
இந்த விழாவை ஒட்டி, விஸ்வ ஹிந்து பரிஷத் அமைப்பினா் சிறப்பு பூஜை நடத்திய பின்னா் பிராண பிரதிஷ்டை விழாவுக்கான அட்சதை அரிசியை பல்வேறு மாநிலங்களுக்கு அனுப்பிவைத்தனா். இதன் ஒரு பகுதியாக தமிழகத்துக்கு வந்த அரிசி மாவட்டவாரியாக பிரித்து அனுப்பிவைக்கப்பட்டது. இதனைப் பிரித்து சிறிய பாக்கெட்டுகளில் பேக்கிங் செய்யும் பணிகள் முடிவடைந்தன. இதைத் தொடா்ந்து, இந்து முன்னணி, விஸ்வ ஹிந்து பரிஷத், ஆா்.எஸ்.எஸ்., பாஜக உள்ளிட்ட பல்வேறு ஹிந்தஅமைப்பு நிா்வாகிகள் அட்சதை அரிசி, விழா அழைப்பிதழை மாநகரில் உள்ள பொதுமக்களிடம் வீடுவீடாகச் சென்று வழங்கி வருகின்றனா்.
இதனிடையே, கோவில் திறப்பு விழாவில் 136 சனாதன பாரம்பரியங்களைச் சேர்ந்த 25,000 இந்து மதத் தலைவர்களை அழைக்க அறக்கட்டளை திட்டமிட்டுள்ளது. இதுதவிர, 10,000 சிறப்பு விருந்தினர்களும் பங்கேற்பார்கள் என்றும் அறக்கட்டளை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.