நிரம்பி ததும்பும் குளத்தை வணங்கிய முன்னாள் அமைச்சர்
நிரம்பி ததும்பும், புலவர் கருக்கம்பாளையம் குளத்தை, முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன், மலர் துாவி வணங்கினார்.;
அத்திக்கடவு அவினாசி திட்டத்தின் கீழ் அமைக்கப்பட்டுள்ள ,எம்மாம்பூண்டி நீரேற்று நிலையத்தை முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் பார்வையிட்டார்.
திருப்பூர் மாவட்டம், அவினாசியின் எல்லையில், ஈரோடு மாவட்டத்துக்கு உட்பட்ட இடத்தில், புலவர் கருக்கம்பாளையம் குளம் அமைந்துள்ளது. சமீபத்தில் பெய்த மழையில், இந்த குளம் நிரம்பியது. இக்குளத்தை, கோபி சட்டமன்ற உறுப்பினரும், முன்னாள் பள்ளிக்கல்வித் துறை அமைச்சருமான செங்கோட்டையன், பவானிசாகர் சட்டமன்ற உறுப்பினர் பண்ணாரி ஆகியோர் பார்வையிட்டு, மலர்தூவி வணங்கினார்.
மேலும், எம்மாம்பூண்டியில் நடைபெற்று வரும், அத்திக்கடவு - அவினாசி நீர்செறிவூட்டும் திட்டத்தின், 5வது நீரேற்று நிலைய பணிகளையும், அவர்கள் பார்வையிட்டனர். இதில், அத்திக்கடவு – அவினாசி திட்ட போராட்டக்குழு ஒருங்கிணைப்பாளர் அத்திக்கடவு சுப்பிரமணியம், நம்பியூர் அஇதிமுக., ஒன்றிய செயலாளர்கள் சுப்பிரமணியம், ஈஸ்வரமூர்த்தி அத்திக்கடவு திட்டம் ஆர்வலர்கள், விவசாயிகள், உள்ளூர் பொதுமக்கள் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.