உலக அமைதிக்காக சைக்கிள் பேரணி
ரோட்டரி நிர்வாகிகள் சார்பில், உலக அமைதியை வலியுறுத்தி, சைக்கிள் பேரணி நடத்தப்பட்டது.
திருப்பூர், ஈரோடு, உடுமலை, கோபி, ஊட்டி ரோட்டரி சங்கங்கள் உள்ளடக்கிய 'ரோட்டரி மாவட்டம் 3201 கோவை' மற்றும் கேரளா மாநிலத்தில் உள்ள சில மாவட்டங்களை உள்ளடக்கிய 'ரோட்டரி மாவட்டம் 3203' ஆகியவற்றின் சார்பில் உலக அமைதி, வறுமை ஒழிப்பு, தரமான கல்வி மேம்பாடு, போலியோ ஒழிப்பு மற்றும் சுற்றுசூழல் பாதுகாப்பு ஆகியவற்றை வலியுறுத்தி அமைதி ஜோதியுடன் சைக்கிளில் விழிப்புணர்வு பேரணி கோபியில் துவங்கியது
குன்னத்தூர், பெருமாநல்லூர், அவினாசி வழியாக மணிக்கு, 20 கிலோ மீட்டர் வேகத்தில், 83 கிலோ மீட்டர் பயணம் செய்து, இந்த பேரணி கோவை சென்றது. இதில், திருப்பூர் மற்றும் கோவை ரைடர்ஸ் கிளப் உள்ளிட்ட, 27 ரோட்டரி சங்கங்களை சேர்ந்த 31 சைக்கிள் வீரர்கள் விழிப்புணர்வு பிரசார பயணம் மேற்கொண்டனர்.உலக அமைதி குறித்து விழிப்புணர்வு பிரசாரம் செய்தனர்.