தொடரும் மழைக்கு நிரம்பும் நீர்நிலைகள்

அவினாசியில் கடந்த சில நாட்களாக பரவலாக பெய்யும் மழையால் நீர்நிலைகள் நிரம்ப துவங்கியுள்ளன.;

Update: 2021-11-05 11:00 GMT

அவிநாசி, நல்லகட்டிபாளையம் செக்டேம் நிரம்பி தண்ணீர் வெளியேறுகிறது.

திருப்பூர் மாவட்டத்தின் பல இடங்களில் பரவலாக மழை பெய்து வருகிறது. அவினாசி செம்பாகவுண்டம்பாளையம் தடுப்பணையில், தண்ணீர் நிரம்பி வழிகிறது. துலுக்கமுத்துார் குளத்திலும் தண்ணீர் நிரம்ப துவங்கியுள்ளது. இவற்றில் இருந்து வெளியேறும் உபரிநீர், சங்கமாங்குளத்தில் தேங்குகின்றன. தொடர்ந்து மழை நீடிக்கும் பட்சத்தில், அவினாசியில் உள்ள அனைத்து நீர்நிலைகளும் நிரம்பும் என, எதிர்பார்க்கப்படுகிறது. இதனால், நிலத்தடி நீர்மட்டம் உயர்ந்து விவசாயம் செழிக்கும் என, விவசாயிகள் எதிர்பார்க்கின்றனர்.

Tags:    

Similar News