விசைத்தறி தொழிலாளர்களுக்கு கூலி உயர்வு ஒப்பந்தம்
அவிநாசி பகுதி விசைத்தறி தொழிலாளர்களுக்கு 15 சதவீத கூலி உயர்வு ஒப்பந்தம் போடப்பட்டுள்ளது.
விசைத்தறி தொழிலாளர்கள் கூலி உயர்வு ஒப்பந்தம் சம்பந்தமாக ஸ்ரீ கருணாம்பிகை விசைத்தறி உரிமையாளர் சங்கத்தினர் உடன் தொழிற்சங்க நிர்வாகிகள் பேச்சுவார்த்தை நடைபெற்றது.
இதில் விசைத்தறி தொழிலாளர்களுக்கு 2014ஆம் ஆண்டு வழங்கிய ஒப்பந்தக் கூலி யிலிருந்து 15 சதம் உயர்வு வழங்கப்படுமென இரு தரப்பினரும் ஒப்பந்தம் செய்து கொண்டனர். இதில் சிஐடியு விசைத்தறி தொழிலாளர் சம்மேளன மாநிலத் தலைவர் முத்துசாமி, சிஐடியு விசைத்தறி தொழிலாளர் சங்கத்தின் மாவட்ட நிர்வாகி பழனிச்சாமி ஏஐடியுசி சார்பில் செல்வராஜ், கனகராஜ் உட்பட பலர் கலந்து கொண்டனர்.