தேசிய வாக்காளர் தினத்தை முன்னிட்டு அவினாசியில் வாக்காளர் தின உறுதிமொழி
அவினாசியில், தேசிய வாக்காளர் தினத்தை முன்னிட்டு, வருவாய்த்துறை ஊழியர்கள் உறுதிமொழி ஏற்றுக்கொண்டனர்.;
இந்தியாவில், ஆண்டு தோறும் ஜனவரி 25,ஆம் நாள், தேசிய வாக்காளர் தினமாக அனுசரிக்கப்படுகிறது. இதை அவினாசி வட்டாட்சியர் அலுவலகத்தில், வட்டாட்சியர் ராகவி தலைமையில், ஊழியர்கள் வாக்காளர் தின உறுதிமொழி ஏற்றுக் கொண்டனர்.
இதில், சமூக பாதுகாப்பு திட்ட வட்டாட்சியர் நந்தகோபால், தேர்தல் பிரிவு துணை வட்டாட்சியர் அழகரசன் உள்ளிட்ட பலர் பங்கேற்று, உறுதிமொழி ஏற்றனர்.