கிராமத்தில் மரக்கன்று நடும் திட்டம்
ஊராட்சியில், மரக்கன்று நடும் திட்டம் துவக்கி வைக்கப்பட்டது.;
திருப்பூர் மாவட்டம், அவினாசி ஊராட்சி ஒன்றியம், சின்னேரிபாளையம் ஊராட்சிக்கு உட்பட்ட வலையபாளையத்தில், அத்திக்கடவு – அவிநாசி நீர் செறிவூட்டும் திட்டத்தை மேற்கொண்டு வரும், 'எல் அண்டு டி' நிறுவனத்தினர் மற்றும் சின்னேரிபாளையம் ஊராட்சி நிர்வாகம் இணைந்து மரம் நடுவதன் அவசியத்தை உணர்த்தும் வகையில், மரக்கன்று நடும் திட்டத்தை துவக்கினர். அதன்படி, 200 மரக்கன்றுகள் நடப்பட உள்ளன.
'எல் அண்டு டி' நிறுவனம் சார்பில், 30 பள்ளி குழந்தைகளுக்கு இனிப்பு மற்றும் தேவையான எழுது பொருட்கள் வழங்கப்பட்டன. இந்த நிகழ்ச்சியில், அத்திக்கடவு – அவிநாசி நீர் செறிவூட்டும் திட்ட அதிகாரிகள், 'எல் அண்டு டி ' நிறுவன அதிகாரிகள், சின்னேரிபாளையம் ஊராட்சி மன்ற தலைவர் சரவணன், துணை தலைவர் சம்பத்குமார், உறுப்பினர்கள் மற்றும் ஊர் கலந்து கொண்டனர்.