கிராம சபைக்கூட்டத்தில், வாயில் கருப்புத்துணி கட்டியபடி பங்கேற்ற மக்கள்
Tirupur News,Tirupur News Today- அவிநாசி ஒன்றியம், அய்யம்பாளையம் ஊராட்சி கிராம சபை கூட்டத்தில், வாயில் கருப்புத்துணி கட்டிய நிலையில், மக்கள் கலந்துகொண்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
Tirupur News,Tirupur News Today- சுதந்திர தினத்தை முன்னிட்டு, நேற்று அவிநாசி ஒன்றியத்தில் 31 ஊராட்சிகளில் கிராம சபை கூட்டம் அந்தந்த ஊராட்சி தலைவர் தலைமையில் நடந்தது.
இதில் அய்யம்பாளையம் ஊராட்சி கிராம சபை கூட்டம், காணாங்குளம் ஊராட்சி மன்ற அலுவலக வளாகத்தில் நடந்தது. ஊராட்சி தலைவர் கருப்பன் தலைமையில் நடந்த கிராம சபை கூட்டத்தில், பொதுமக்கள் சிலர், வாயில் கருப்பு துணி கட்டிய நிலையில் கலந்துகொண்டது, பலருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. வீட்டுமனை பட்டா கேட்டு மனு கொடுத்து ஆண்டுக்கணக்காக எந்த நடவடிக்கையும் இல்லாததை கண்டித்து, வாயில் கருப்பு துணி கட்டி, அவர்கள் கலந்துக்கொண்டனர்.
தகவல் அறிந்த கிராம நிர்வாக அலுவலர் சதீஷ்குமார், அங்கு வந்து இது குறித்து மாவட்ட கலெக்டரிடம் தெரிவிக்கப்பட்டுள்ளது. கூடிய விரைவில் பட்டா வழங்க நடவடிக்கை எடுக்கப்படும், என்று கூறினார். இதையடுத்து மன்றப்பொருள் படிக்கப்பட்டு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன
உடுமலை ஒன்றியம்; 38 ஊராட்சிகளில் கிராம சபைக்கூட்டம்
உடுமலை ஒன்றியத்துக்கு உட்பட்ட 38 ஊராட்சிகளில் கிராம சபை கூட்டம் நடந்தது. அதன்படி 38 ஊராட்சிகளில் பல்வேறு நிகழ்வுகள் அடங்கிய 839 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.
உடுமலை ஒன்றியம், பெரியகோட்டை ஊராட்சியில் நடந்த நிகழ்ச்சிக்கு ஒன்றியக் குழு தலைவர் மகாலட்சுமி முருகன் தலைமை வகித்தார். உடுமலை கிழக்கு ஒன்றிய செயலாளர் எஸ்.கே. மெய்ஞானமூர்த்தி முன்னிலை வகித்தார். ஊராட்சி மன்ற தலைவர் பேச்சியம்மாள் பாலசுப்பிரமணியம், துணைத் தலைவர் விஸ்வநாதன், செயலாளர் உள்ளிட்ட உறுப்பினர்கள், பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
ராகல்பாவி ஊராட்சியில் நடந்த கிராம சபை கூட்டத்தில் உடுமலை தாசில்தார் கண்ணாமணி தலைமை வகித்தார். ஆண்டியகவுண்டனூர் ஊராட்சியில் நடந்த கிராம சபை கூட்டத்தில் வட்டார வளர்ச்சி அதிகாரி சுப்பிரமணியம் (கி.ஊ) கலந்து கொண்டார். இதே போன்று அனைத்து ஊராட்சிகளிலும் கிராமசபை கூட்டம் நடந்தது.
இதில் வருவாய்த்துறை மற்றும் ஒன்றிய அதிகாரிகள், தலைவர்கள், துணைத் தலைவர்கள், ஊராட்சி மன்ற உறுப்பினர்கள், செயலாளர்கள், உடுமலை வட்ட சட்ட பணிகள் குழுவைச் சேர்ந்த நிர்வாகிகள், வக்கீல்கள், பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.