ஒட்டக மண்டலத்தில் 23ம் தேதி கால்நடை மருத்துவ முகாம்
ஒட்டக மண்டலத்தில் வரும், 23ம் தேதி கால்நடை மருத்துவ முகாம் நடக்கிறது.;
திருப்பூர் மாவட்டம், அவினாசி சட்டசபை தொகுதிக்கு உட்பட்ட அன்னுார் ஒட்டக மண்டலத்தில், கால்நடை பராமரிப்புத்துறை சார்பில், வாரம் ஒரு கிராமத்தில் சிறப்பு கால்நடை மருத்துவ மற்றும் விழிப்புணர்வு முகாம் நடக்கிறது.
இந்த வார முகாம் எல்.கோவில்பாளையம் கால்நடை மருந்தகம் சார்பில் குப்பனுார் ஊராட்சி ஒட்டக மண்டலத்தில் வரும், 23ம் தேதி நடக்கிறது. முகாமில், குடற்புழு நீக்கம், சினைப் பரிசோதனை, சினை ஊசி போடுதல், மலடு நீக்க சிகிச்சை உள்ளிட்ட அனைத்து சிகிச்சைகளும், பரிசோதனைகளும் அளிக்கப்படும்.
கால்நடை வளர்ப்போர் ஆடு, மாடு, கோழி உள்ளிட்ட தங்களது கால்நடைகளை முகாமிற்கு கொண்டு வந்து பரிசோதனை செய்து சிகிச்சை பெறலாம்.'வருகிற, 27ம் தேதி மசக்கவுண்டன் செட்டிபாளையம் ஊராட்சி அருகம்பாளையத்திலும், 30ம் தேதி குப்பேபாளையம் ஊராட்சி செங்காளி பாளையத்திலும் முகாம் நடக்கிறது. கால்நடை வளர்ப்போர், தங்கள் பகுதி முகாமில் பங்கேற்று பயன்பெறலாம்' என கால்நடை பராமரிப்பு துறையினர் தெரிவித்துள்ளனர்.