அவினாசி அருகே புதுச்சந்தை கிராமத்தில் கால்நடை மருத்துவ முகாம்

அவினாசி அருகே தத்தனுார் ஊராட்சி, புதுச்சந்தை கிராமத்தில், கால்நடை சுகாதார முகாம் நடத்தப்பட்டது.

Update: 2022-01-20 04:15 GMT

முகாமில், சிறந்த முறையில் கால்நடை பராமரிப்புக்கான பரிசு வழங்கப்பட்டது. 

திருப்பூர் மாவட்டம், தத்தனுார் ஊராட்சி, புதுச்சந்தையில், கால்நடை பராமரிப்பு துறை சார்பில், கால்நடை சுகாதாரம் மற்றும் விழிப்புணர்வு சிறப்பு முகாம் நடத்தப்பட்டது. முகாமில், அப்பகுதியை சேர்ந்த, 85க்கும் மேற்பட்ட கால்நடை வளர்ப்போர் பங்கேற்றனர். பசு, எருது, செம்மறியாடு, வெள்ளாடுகளுக்கு தடுப்பூசி, கருவூட்டல், சினை பரிசோதனை, குடற்புழு நீக்கம் உள்பட பல பரிசோதனை மற்றும் சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது.

திருப்பூர் கோட்ட கால்நடை பராமரிப்பு துறை உதவி இயக்குனர் டாக்டர் பரிமள ராஜ்குமார் தலைமை வகித்து, சிறந்த கிடாரி கன்றுகளுக்கு பரிசு, சிறந்த கால்நடை வளர்ப்போருக்கு விருதுகளை வழங்கினார். தத்தனுார் ஊராட்சி மன்ற தலைவர் விஜயகுமார், ஒன்றியக்குழு உறுப்பினர் உமாபதி ஆகியோர் முன்னிலை வகித்தனர். கால்நடை உதவி மருத்துவர்கள் பாலசுப்பிரமணியம், கார்த்திகேயன் ஆகியோர் கால்நடைகளுக்கு பரிசோதனைமற்றும் சிகிச்சை அளித்தனர்.

Tags:    

Similar News