கம்ப்யூட்டர் துறையில் 'அப்டேட்' அவசியம் - அவினாசி கல்லுாரியில் கருத்தரங்கம்

‘கம்ப்யூட்டர் துறையில் சாதிக்க, அப்டேட் அவசியம்’ என அவினாசி அரசு கலை மற்றும் அறிவியல் கல்லுாரி கருத்தரங்கில் தெரிவிக்கப்பட்டது.

Update: 2021-12-21 15:00 GMT

அவினாசி அரசு கலை மற்றும் அறிவியல் கல்லுாரியில் கம்ப்யூட்டர் அறிவியல் துறை சார்பில் நடைபெற்ற கருத்தரங்கம்.

அவினாசி அரசு கலை மற்றும் அறிவியல் கல்லுாரியில் கம்ப்யூட்டர் அறிவியல் துறை சார்பில், 'பைத்தான்' மற்றும் 'வெப் டிசைனிங்' என்ற தலைப்பில் கருத்தரங்கம் நடைபெற்றது. கம்ப்யூட்டர் அறிவியல் துறை பேராசிரியர் செந்தில்குமார் வரவேற்று பேசினார்.

கல்லுாரி முதல்வர் நளதம் தலைமை வகித்தார். இதில், 'லைவ் வயர்' என்ற தனியார் துறை நிர்வாக இயக்குனர் ஸ்ரீதர், தொழில்நுட்ப அலுவலர் கிருஷ்ணன், வேலை வாய்ப்பு அலுவலர் தினேஷ்குமார் ஆகியோர் பேசினார்.

'கம்ப்யூட்டர் அறிவியல் படிக்கும் மாணவர்களின் வேலை வாய்ப்பு குறித்தும், பாட திட்டம் மற்றும் வேலைவாய்ப்புக்கு இடையேயான இடைவெளியை போக்கும் வகையில், தங்களது திறமையை வளர்த்துக் கொள்ள வேண்டும். தற்கால சூழலுக்கு ஏற்றவாறு தொழில்நுட்பங்களை கற்றுக்கொண்டு தயாராக இருந்தால், வாய்ப்பு வரும்போது சரியாக பயன்படுத்தி, வாழ்க்கையில் வெற்றி பெறலாம்' என்பது போன்ற அறிவுரை வழங்கப்பட்டன. இதற்கான ஏற்பாடுகளை, கம்ப்யூட்டர் அறிவியல் துறை தலைவர் ஹேமலதா செய்திருந்தார்.

Tags:    

Similar News