நிலக்கடலைக்கு எதிர்ப்பாராத விலை: விவசாயிகள் மகிழ்ச்சி
நிலக்கடலைக்கு எதிர்பாராமல் கிடைத்த கூடுதல் விலையால், விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.
திருப்பபூர் மாவட்டம் அவிநாசி சுற்றுவட்டார பகுதிகள், ஈரோடு மாவட்டம் கோபி, நம்பியூர் உள்ளிட்ட பல இடங்களில், நிலக்கடலை சாகுபடியில் ஏராளமான விவசாயிகள் ஈடுபட்டு வருகின்றனர். அறுவடை செய்யப்படும் நிலக்கடலை, சேவூர் ஒழுங்குமுறை விற்பனைக்கூடத்தில் வாரந்தோறும் விற்பனைக்கு வருகிறது.
தற்போது சீசன் முடிந்த நிலையில், நிலக்கடலை இருப்பு வைத்துள்ள விவசாயிகள், நிலக்கடலையை ஏலத்துக்கு எடுத்து வருகின்றனர். கடலை மிட்டாய், கடலை எண்ணெய் தேவைக்கு அதிகளவு நிலக்கடலை, வியாபாரிகளால் கொள்முதல் செய்யப்படும் நிலையில், அதன் தேவை அதிகரித்திருக்கிறது. விலையும், கிலோவுக்கு, 80 முதல், 83 ரூபாய் வரை கிடைத்துள்ளது. இதனால், விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.