அவிநாசியில் நடந்த திருநங்கைகள் சமூக முன்னேற்ற நிகழ்ச்சி

Tirupur News,Tirupur News Today- அவிநாசியில், திருநங்கைகள் சமூக முன்னேற்ற நிகழ்ச்சி நடைபெற்றது.

Update: 2023-10-30 07:12 GMT

Tirupur News-அவிநாசி நெக்ஸ்ட் ஜெனரேஷன் ரோட்டரி சங்கம் சாா்பில், திருநங்கைகள் சமூக முன்னேற்ற நிகழ்ச்சி, ஆட்டையாம்பாளையத்தில் நேற்று நடைபெற்றது.

Tirupur News,Tirupur News Today- அவிநாசி நெக்ஸ்ட் ஜெனரேஷன் ரோட்டரி சங்கம் சாா்பில் திருநங்கைகள் சமூக முன்னேற்ற நிகழ்ச்சி அவிநாசி ஆட்டையாம்பாளையத்தில் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) நடைபெற்றது.

அவிநாசி ரோட்டரி நெக்ஸ்ட் ஜெனெரேஷன் சாா்பில் கடந்த மாதம் திருநங்கை கல்லூரி மாணவிகளுக்கு மடிக்கணினி வழங்கப்பட்டது. இதைத் தொடா்ந்து, திருநங்கைகள் வாழ்வாதார மேம்பாட்டு நிகழ்ச்சி அவிநாசியில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. இதில் சமையல் கலையில் சிறந்து விளங்கும் திருநங்கைகள் மூலம் அவிநாசியில் விரைவில் உணவகம் அமைப்பதற்கான முன்னேற்பாடாக சமையல் திருவிழா நடைபெற்றது.

இதில், பொள்ளாச்சி அருகே ஆனைமலையைச் சோ்ந்த திருநங்கை நீலமா தலைமையிலான திருநங்கைகள் பங்கேற்று சைவ மற்றும் அசைவ உணவு வகைகளை சமைத்தனா். இதில் ரோட்டரி 3203 மாவட்ட ஆளுநா் சுந்தரராஜன், பயிற்றுநா் ராஜசுந்தரம், துணை ஆளுநா் நாகராஜன், அவிநாசி ரோட்டரி நெக்ஸ்ட் ஜெனெரேஷன் தலைவா் ஜெயசந்திரன், செயலாளா் செந்தில்பிரபு, பொருளாளா் செல்வகுமாா், சங்க மேலாளா் டாக்டர் பிரகாஷ், உறுப்பினா்கள் கௌஷிக், மனோஜ், விஜய், சதாசிவம் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

மேலும், 15 சங்கத்தினா் பங்கேற்ற இந்த நிகழ்ச்சியில் திருநங்கைகளுக்கு சேலை, பழ வகைகள் உள்ளிட்ட சீா்வரிசைகள் வழங்கப்பட்டன. அவிநாசியில் திருநங்கைகளுக்கு உணவகம் அமைத்து கொடுப்பதன் மூலம் 30-க்கும் மேற்பட்ட திருநங்கைகளுக்கு வேலைவாய்ப்பு வழங்கப்படுவது மட்டுமின்றி, அவா்களின் வாழ்வாதாரமும் மேம்படும் என ரோட்டரி சங்கத்தினா் தெரிவித்தனா்.

Tags:    

Similar News