திருப்பூர் அரசு பள்ளி மாணவனுக்கு மருத்துவ கல்லூரியில் இடம் ஒதுக்கீடு

அரசு பள்ளியில் படித்த பனியன் நிறுவன டெய்லர் மகன், 'நீட்' தேர்வெழுதி, மருத்துவ படிப்புக்கு தேர்ச்சி பெற்றுள்ளார்.;

Update: 2022-01-30 06:45 GMT

நீட் தேர்வில் தேர்ச்சி பெற்ற அரசு பள்ளி மாணவன் ஜெகன்.

அரசு பள்ளியில் படித்த பனியன் நிறுவன டெய்லர் மகன், 'நீட்' தேர்வெழுதி, மருத்துவ படிப்புக்கு தேர்ச்சி பெற்றுள்ளார்.

திருப்பூர் மாவட்டம், பழங்கரை ஊராட்சிக்கு உட்பட்ட பெரியாயிபாளையம் பகுதியில் வசிப்பவர், கணேசன்; பனியன் நிறுவனத்தில் டெய்லராக பணிபுரிகிறார். இவரது தாய், பாரதி. இவர்களது மகன் ஜெகன், பெரியாயிபாளையம் திருவள்ளுவர் அரசு மேல்நிலைப் பள்ளியில், பிளஸ் 2 படித்து, 'நீட்' தேர்வெழுதி, 7.5 சதவீத உள் இட ஒதுக்கீட்டில், மருத்துவ படிப்புக்கு தேர்ச்சி பெற்றுள்ளார்.

ஜெகன் கூறுகையில், ''என் பெற்றோருக்கு நான் டாக்டராக வேண்டும் என்ற கனவு இருந்தது. பள்ளி உயிரியல் பாட ஆசிரியை சுமித்ரா, டாக்டர் படிப்புக்குரிய பயிற்சி பெற என்னை சிறப்பான முறையில் ஊக்குவித்தார். அதன் மூலம் எனக்கும் அந்த ஆர்வம் வந்தது. தலைமையாசிரியர் குமரேசன் உள்ளிட்ட பிற ஆசிரியர்களும் நல்ல முறையில் ஊக்குவித்தால், என்னால் வெற்றி பெற முடிந்தது,''  என்றார்.

Tags:    

Similar News