அவினாசிலிங்கேஸ்வரர் கோவிலில் திருக்கோடி தீபம்

அவினாசி லிங்கேஸ்வரர் கோயிலில், கார்த்திகை தீபத்தை முன்னிட்டு திருக்கோடி தீபம் ஏற்றப்பட்டது.;

Update: 2021-11-18 16:15 GMT

அவிநாசி லிங்கேஸ்வரர் கோவிலில், திருக்கோடி தீபம் ஏற்றப்பட்டது.

திருப்பூர் மாவட்டம், அவினாசியில் உள்ள அவினாசிலிங்கேசுவரர் கோயிலில், கார்த்திகை தீபத்தை முன்னிட்டு, கொடிமரத்தின் முன்பு திருக்கோடி தீபம் ஏற்றி வைக்கப்பட்டது. முன்னதாக, சிறப்பு அலங்காரத்தில் வீற்றிருந்த கருணாம்பிகையம்மன் உடனமர் அவிநாசிலிங்கேசுவரர் மற்றும் சுப்ரமண்யருக்கு சிறப்பு பூஜை செய்து, தீபாராதனை நடத்தப்பட்டது.

கோயில் சிவாச்சாரியார், தீபமேற்றும் பந்தத்தை ஏந்தியவாறு, கோவில் பிரகாரத்தை வலம் வந்து, கொடிமரத்தின் முன்பு அமைக்கப்பட்டிருந்த திருக்கோடி தீபத்தை ஏற்றினார். பிறகு, தீபஸ்தம்பம் அருகே சொக்கப்பனை எரிக்கப்பட்டது. ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர்.

Tags:    

Similar News