கோவில் சிலைகள் திருட்டு? அனுமன் சேனா குற்றச்சாட்டு

கோவில் சிலைகள் திருடப்பட்டது தொடர்பாக, ஆலோசனைக் கூட்டம் நடத்த, அனுமன் சேனா முடிவெடுத்துள்ளது.

Update: 2022-01-29 13:45 GMT

புதர் பகுதியில் காணப்படும் கோயில் சிலை. 

கோவில் சிலைகள் திருடப்பட்டது தொடர்பாக, ஆலோசனைக்கூட்டம் நடத்த, அனுமன் சேனா முடிவெடுத்துள்ளது. அனுமன் சேனா மாநில பொது செயலாளர் தியாகராஜன் அறிக்கையில் கூறியுள்ளதாவது:

திருப்பூர் மாவட்டம், அவிநாசி வட்டம், அய்யம்பாளையம் கிராமத்தில் கடந்த ஆண்டு பழமையான கல் கோயில் இடித்து தரைமட்டமாக்கப்பட்டது. அதிலிருந்த சிவன், நந்தி சிலைகள் திருடப்பட்டது. அதேபோன்று எம். நாதம்பாளையம் கிராமத்தில், கோவில் இடிக்கப்பட்டு சிலைகள் திருடப்பட்டன.

இந்த இரண்டு கோயில்கள் இடிப்பு மற்றும் சிலை திருட்டு தொடர்பாக புகார் அளித்தும், அவிநாசி காவல் நிலையத்தின் சார்பில், முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யாமலும் எந்தவித விசாரணையும் நடத்தாமலும் அலட்சியமாக செயல்பட்டு வருகின்றனர்.

இதுவரை குற்றம் சாட்டப்பட்டவர்கள் மீது எவ்வித விசாரணையும் நடவடிக்கையும் எடுக்காமல் குற்றவாளிகளுக்கு ஆதரவாக செயல்படுவதாக கருதுகிறோம். அவிநாசி காவல்துறையை கண்டித்து வழக்குப்பதிந்து, நேர்மையான விசாரணை நடத்தி குற்றவாளிகளை கைது செய்து, சிலையை மீட்டு பக்தர்களிடம் ஒப்படைக்கும் வரை போராட்டம் நடத்துவது தொடர்பாக வரும் 30ம் தேதி (நாளை) மாலை 7.00 மணியளவில் அகில பாரத அனுமன் சேனா மாநில தலைவர் ஸ்ரீதர் தலைமையில் ஆலோசனைக்கூட்டம் நடைபெற உள்ளது. இவ்வாறு, அவர் கூறியுள்ளார்.

Tags:    

Similar News