ஐயா, டாஸ்மாக் கடையை மூடாதீங்க... கலெக்டரிடம் 'இப்படியும்' ஒரு கோரிக்கை
Tasmac News Today Tamil - திருப்பூர் அருகே மேற்குபதியில் உள்ள டாஸ்மாக் கடையை மூடக்கூடாது என்று, கலெக்டரிடம் 'குடி'மகன்கள் மனு அளித்தனர்.;
Tasmac News Today Tamil - திருப்பூர் கலெக்டர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர்க்கும் கூட்டம் கலெக்டர் வினீத் தலைமையில் நடந்தது. கூட்டத்தில் திருப்பூர் அருகே உள்ள மேற்குபதியை சேர்ந்த விவசாய கூலி தொழிலாளர்கள் மற்றும் அப்பகுதி மக்கள் வந்து மனு அளித்தனர். அந்த மனுவில், 'மேற்குபதியில் டாஸ்மாக் மதுக்கடை கடந்த நான்கு ஆண்டுகளாக யாருக்கும் இடையூறு இல்லாமல் செயல்படுகிறது. பள்ளி, கல்லூரி எதுவும் அருகில் இல்லை. குடியிருப்பு பகுதிகளும் அருகில் இல்லை.
இந்நிலையில் சிலரின் அரசியல் காழ்ப்புணர்ச்சியால், டாஸ்மாக் கடையை மூட முயற்சி நடக்கிறது. இந்த கடையை மூடினால் விவசாய கூலி தொழிலாளர்கள், மது அருந்துவோர், ஏழு கிலோ மீட்டர் தூரத்தில் உள்ள குன்னத்துார் மற்றும் பெருமாநல்லுாரில் உள்ள மதுபான கடைகளுக்கு செல்ல வேண்டும். டாஸ்மாக் கடையை மூடினால் போலி மதுபானங்கள் மற்றும் கள்ளச்சாராயம் விற்பது போன்ற சமூக விரோத செயல்கள் நடக்கும் ஆபத்து உள்ளது.
எனவே, டாஸ்மாக் கடையை மூடாமல் தற்போதைய இடத்திலேயே நிரந்தரமாக செயல்பட அனுமதிக்க வேண்டும்' என்று கூறியுள்ளனர்.
டாஸ்மாக் கடைகளால் பொதுமக்களுக்கு தொந்தரவு, கடையை உடனடியாக மூட வேண்டும் என்று, பல இடங்களில் பொதுமக்கள் மனு அளித்து வரும் நிலையில், டாஸ்மாக் கடையை மூடக்கூடாது என்று மனு கொடுத்த 'குடி'மகன்களை பார்த்த பலரும் ஆச்சரியப்பட்டனர்.
அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2